Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஸ்டாலின் குறித்து பேசினால் இனி அவ்வளவு தான்.. இது தான் கடைசி!! சிவி சண்முகத்துக்கு கோர்ட் கொடுத்த வார்னிங்!!

HC issues order on CV Shanmugam's defamation of Stalin

HC issues order on CV Shanmugam's defamation of Stalin

ADMK DMK: திமுக தங்களைப் பற்றி யார் பேசினாலும் அவர்களை அதிகாரம் கொண்டு பல விதங்களில் தாக்கி விடுகின்றனர். ஏன் இடைத்தேர்தல் சமயங்களில் கூட இவர்களுக்கு எதிராக கிளி ஜோசியம் பார்த்தவரை கூட விடவில்லை. இப்படி இவர்களைப் பற்றி பேசினாலே அவர்கள் மீது வழக்கு தொடுப்பது என்று அதிகார விதிமீறல் செய்து வருவதையே வழக்கமாக வைத்துள்ளனர். இதில் அதிமுக மாஜி அமைச்சர் சிவி சண்முகம் மீது ஸ்டாலினை அவதூறாக  பேசியது என கிட்டத்தட்ட பல அவதூறு வழக்குகள் குவிக்கப்பட்டுள்ளது.

இது ரீதியான வழக்கானது உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அந்த வகையில் சி.வி சண்முகம் வழக்கறிஞர் இவர் மீது உள்ள அவதூறு வழக்கை ரத்து செய்யும்படி மனு அளித்திருந்தார். மேற்கொண்டு நீதிமன்ற அமர்வில், அரசியலில் எதிர்க்கட்சிக்கு எதிராக கண்டனம் தெரிவிப்பதெல்லாம் சாதாரணமான ஒன்று. திமுக தனது அதிகாரத்தை பயன்படுத்தி இப்படி வழக்கு தொடுத்து வருகிறது எனவும் வாதாடினார். இதற்கு எதிர் தரப்பினர், எதிர்க்கட்சி சார்பாக எந்த ஒரு கருத்தையும் தாராளமாக தெரிவிக்கலாம் மாறாக கொச்சை வார்த்தையிலோ அல்லது உருவ கேலியோ தான் செய்யக்கூடாது.

இதுகுறித்தும் பலமுறை நீதிமன்றம் எச்சரித்துள்ளது. ஆனால் அதை பொருட்படுத்தாமல் சிவி சண்முகம் தொடர்ந்து அதையே தான் செய்து வருகிறார். அதனால் தான் இந்த வழக்கு தொடுக்கப்பட்டது எனறு கூறினர். இரு தரப்பையும் விசாரித்த நீதிபதி இனி இவ்வாறு கொச்சையாக பேசக்கூடாது என்று கூறி சிவி சண்முகத்தின் மீது உள்ள அவதூறு வழக்குகள் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளர். நாளடைவில் இது குறித்த வழக்குகள் மீண்டும் தொடரப்பட்டால் கட்டாயம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

Exit mobile version