Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்ட ஹெச்டிஎஃப்சி வங்கி!

கடன் வழங்குதலில் முதன்மையான வங்கியாக செயல்படும் ஹச் டி எஃப் சி சென்ற 26 ஆம் தேதி பிக்சட் டெபாசிட் திட்டங்களில் வட்டி விகிதங்கள் உயர்த்தப்படுவதாக அறிவித்தது. அக்டோபர் மாதத்தில் மட்டும் ஹெச்டிஎஃப்சி இரண்டாவது முறையாக பிக்சட் டெபாசிட் திட்டங்களில் வட்டியை அதிகரித்திருக்கிறது. இரண்டு கோடிக்கும் குறைவான டெபாசிட் தொகைகளுக்கு இந்த வட்டி விகிதங்கள் பொருந்தும் எச்டிஎப்சி வங்கி எப்பி வட்டி விகிதங்களை 50 அடிப்படை புள்ளிகள் வரையில் அதிகரித்துள்ளது.

இந்த உயர்வுக்கு பின்னர் ஹெச்டிஎஃப்சி வங்கி 7 தினங்கள் முதல் 10 வருடங்கள் வரையில் டெபாசிட்டுகளுக்கு 3 சதவீதம் முதல் 6.25% வரையிலான வட்டி விகிதத்தை பொது வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. மூத்த குடிமக்களுக்கு பொது வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் வட்டி விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் கூடுதல் வட்டி விகிதத்தை வழங்குகிறது. இந்த பட்டி உயர்வதற்கு பின்னர் மூத்த குடிமக்கள் ஏழு நாட்கள் முதல் 10 வருடங்கள் வரையிலான எப்டிகளில் 3.5 சதவீதம் முதல் 6.95% வரையில் வட்டி விகிதத்தை பெறுவார்கள்.

ஹெச்டிஎஃப்சி டெர்ம்டெபாசிட் திட்டத்தின் வட்டி விகிதங்களையும் திருத்தி உள்ளது. இப்போது 4.50 சதவீதம் முதல் 6.25% முறையான வட்டி விகிதங்களை பொதுமக்களுக்கு 6 மாதங்கள் முதல் 120 மாதங்கள் வரைவிலான கால அவகாசத்துடன் வழங்குகிறது.

7 – 14 நாட்கள் 3.00%

15 – 29 நாட்கள் 3.00%

30 – 45 நாட்கள் 3.50%

46 – 60 நாட்கள் 4.00%

61 – 89 நாட்கள் 4.50%

90 நாட்கள் – 6 மாதங்கள் 4.50%

6 மாதங்கள் 1 நாட்கள் – 9 மாதங்கள் 5.25%

9 மாதங்கள் 1 நாள் முதல் – 1 வருடம் 5.50%

1 வருடம் முதல் 15 மாதங்கள் வரை 6.10%

15 மாதங்கள் முதல் – 18 மாதங்கள் வரை 6.15%

18 மாதங்கள் முதல் – 21 மாதங்கள் வரை 6.15%

21 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை 6.15%

2 ஆண்டுகள் 1 நாள் – 3 ஆண்டுகள் 6.25%

3 ஆண்டு 1 நாள் முதல் 5 ஆண்டுகள் வரை 6.25%

5 ஆண்டு 1 நாள் முதல் 10 ஆண்டுகள் வரை 6.20%

Exit mobile version