ஹோட்டலில் இரவு என்னை தங்கச் சொன்னார்! ஷாருக்கான படத்தின் நடிகை இயக்குநர் மீது புகார்!!

0
75
ஹோட்டலில் இரவு என்னை தங்கச் சொன்னார்! ஷாருக்கான படத்தின் நடிகை இயக்குநர் மீது புகார்!!
படத்தின் வாய்ப்பு வேண்டும் என்றால் ஹோட்டலில் இரவு தங்க வேண்டும் என்று இயக்குநர் ஒருவர் கூறியதாக நடிகர் ஷாருக்கான் நடித்த படத்தில் நடித்த பிரபல நடிகை ஒருவர் கூறியுள்ளார். இந்த சம்பவம் சினிமா துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே நடிகைகள் பலர் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகளை மீ டூவில் பதிவு செய்து வருகின்றனர். அந்த வரியில் பிரபல ஹிந்தி நடிகை ஒருவரும் தனக்கு நடந்த பாலியல் தொல்லை குறித்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
நடிகர் ஷாரூக்கஞான் நடிப்பில் இயக்குநர். குந்தன் ஷா  இயக்கத்தில் 1994ம் ஆண்டு வெளியாகிய கபி ஹான் கபி நா திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த திரைப்படத்தில் பிரபல ஹிந்தி நடிகை சுசித்ரா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் முக்கிய கதாப்பாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார். நடிகை சுசித்ரா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தான் பாலியல் தொல்லை குறித்து கூறியுள்ளார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் இது குறித்து நடிகை சுசித்ரா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் “நான் ஒரு படத்தில் நடிப்பதற்காக இயக்குநர் ஒருவரை ஹோட்டலில் சந்தித்து பேசினேன். அப்போது அவர் என்னிடம் நீ யாருடன் இருக்கிறாய். அப்பாவோடு இருக்கிறாயா அல்லது அம்மாவுடன் இருக்கிறாயா என்று கேட்டார். நான் அப்பவோடு இருக்கிறேன் என்று கூறினேன்.
உடன அவர் ‘ரொம்ப நல்லது இன்று ஒரு நாள் இரவு மட்டும் ஹோட்டலில் தங்கி விட்டு மறுநாள் காலையில் வருகிறேன் என்று உன் தந்தையிடம் கூறிவிடு’ என்று அந்த இயக்குநர் என்னிடம் கூறினார். மேலும் நானே உன்னை வீட்டில் கொண்டு வந்து விடுகிறேன் எனவும் கூறினார்.
அந்த இயக்குநர் என்ன நோக்கத்துடன் கூறினார் என்பது எனக்கு புரிந்தது. எனக்கு அழுகை வந்தது. அழுதேன். உடனே நான் அந்த இயக்குநரிடம் எனது பொருள்களை எல்லாம் எடுத்துவிட்டு வருகிறேன் என்று கூறிவிட்டு வெளியே ஓடி வந்துவிட்டேன் என்று அந்த பிரபல நடிகை கூறினார்.  நடிகை சுசித்ரா கிருஷ்ணமூர்த்தி அவர்களின் இந்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.