ஆதிபுருஷ் படத்தினை பார்க்க ஒவ்வொரு தியேட்டரிலும் தனியாக ஒதுக்கப்பட்டுள்ள சீட் இவருக்கு தானாம் ! வெளிவந்த லேட்டஸ்ட் அப்டேட்!
ஆதிபுருஸ் படத்திற்காக அனைத்து தியேட்டர்களிலும் ஒரு நபருக்காக தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
புராணங்களை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு கதைகள் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளன. இறுதியாக சமந்தா நடித்த சாகுந்தலம் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.
இதையடுத்து இராமாயண கதையின் ஒரு பகுதியை மையமாக கொண்டு ஓம்ராவத் இயக்கியுள்ள படம் ஆதிபுருஷ். இந்த படத்தில் பிரபாஸ் ராமனாகவும், கீர்த்தி சனோன் சீதையாகவும், ராவணனாக சைஃப் அலிக்கான் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படமானது வருகின்ற ஜூன் 16-ஆம் தேதி வெள்ளிக்கிழமை திரையிடப்பட உள்ளது.
பிரம்மாண்டமாக பெருமளவு பொருட்செலவில் 3d தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்ட இந்த படத்தின் டிரைலர் வெளியாகி கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது. இதில் உள்ள கிராபிக்ஸ் காட்சி மிகவும் மோசமாக உள்ளது எனவும், கார்ட்டூன் படம் பார்ப்பது போல இருக்கிறது என்றும் விமர்சனங்கள் எழுந்தன.
எனவே இந்த படத்தின் வெளியீடு தேதி தள்ளி வைக்கப்பட்டு கிராபிக்ஸ் காட்சிகளில் மிகவும் கவனம் செலுத்தப்பட்டது. மேலும் 100 கோடி செலவு செய்யப்பட்டு கிராபிக்ஸ் காட்சிகளை வலுப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்றது. அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில் வருகின்ற வெள்ளிக்கிழமை படம் ரிலீஸாக இருக்கிறது.
ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு உட்பட ஐந்து மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ளது. ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் முன்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தயாரிப்பாளர்கள் ஏற்கனவே அறிவித்தபடி ஒவ்வொரு தியேட்டரிலும் அனுமாருக்காக தனி இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இருக்கையில் ஆஞ்சநேயர் புகைப்படத்துடன் ஜெய் ஸ்ரீ ராம் என்ற வாசகமும் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த இருக்கையின் புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது.