Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இவர்தான் உங்கள் தோல்விக்கு காரணம்! சசிகாந்த் செந்தில் விமர்சனம்!!

#image_title

இவர்தான் உங்கள் தோல்விக்கு காரணம்! சசிகாந்த் செந்தில் விமர்சனம்!
கர்நாடக மாநிலத்தின் சட்டசபை தேர்தலில் பாஜக தோல்வி அடைந்ததற்கு அண்ணாமலை அவர்கள் தான் காரணம் என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சசிகாந்த் செந்தில் மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
கர்நாடக மாநில சட்டசபை தேர்தலின் முடிவுகள் நேற்று அதாவது மே 13ம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 130க்கும் அதிகமான தொகுதிகளை கைப்பற்றி தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. பாஜக கட்சி தோல்வி பெற்றது. காங்கிரஸ் வெற்றி மற்றும் பாஜக தோல்வி குறித்து பல அரசியல் கட்சி தலைவர்களும் கருத்து தெரிவித்து வரும் நிலையில் கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் பாஜக தோல்வியடைந்ததை குறித்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சசிகாந்த் செந்தில் விமர்சித்துள்ளார்.
பாஜக கட்சியின் லோல்வி குறித்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சசிகாந்த் செந்தில் அவர்கள், “அண்ணாமலை அவர்களை கர்நாடக தேர்தல் பொறுப்பாளராக அழைத்து வர ஐடியா கொடுத்தவருக்கு நன்றி” என்று கூறிய இவர் பாஜக கட்சி இந்த தேர்தலில் தோல்வி அடைந்ததற்கு அண்ணாமலை அவர்கள் தான் காரணம் என்று மறைமுகமாக விமர்சித்துள்ளார். கர்நாடகத் தேர்தலில் அண்ணாமலை அவர்கள் பொறுப்பேற்றிருந்த தொகுதிகளில் பாஜக கட்சி 50 சதவீதம் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.
Exit mobile version