இவர் தான் முதலில் ஒரு கோடி சம்பளம் வாங்கிய நடிகர்!! பாலிவுட் சூப்பர் ஸ்டாரோ கோலிவுட் சூப்பர் ஸ்டாரோ கிடையாது!!

0
111
He is the first actor who received a salary of one crore!! There is no Bollywood superstar or Kollywood superstar!!

இந்திய நடிகர்களில் முதன்முதலாக அமிதாப்பச்சன், ரஜினி போன்ற சூப்பர் ஸ்டார்களுக்கு முன்னதாகவே வேறொரு நடிகர் ஒரு கோடியை சம்பளமாக பெற்றுள்ளார்.

தற்போது சினிமா துறையில் ஏராளமான நடிகர்கள் மற்றும் நடிகைகள்  ஒரு கோடி சம்பளம் பெறுவது என்பது எளிதாக உள்ளது. ஆனால் 70 மற்றும் 80 காலகட்டங்களில் அத்தகைய சூழல் நிலவியது இல்லை.  ஒரு சில நடிகர், நடிகைகள் தான் தாங்கள் நடிக்கும் படத்திற்கு அதிக சம்பளத்தை பெற்று வந்துள்ளனர்.

70, 80 கால கட்டங்களில் இந்திய திரைப்படங்கள் பெரிய அளவில் வளர்ச்சி கண்டது. இதன் காரணமாக நடிகர்களும் தங்களது சம்பளத்தை உயர்த்தினர். அந்த காலகட்டத்தில் உச்ச நடிகராக இருந்த அமிதாப்பச்சன் தனது சம்பளத்தை ரூ.10 லட்சத்திலிருந்து ரூபாய்.50 லட்சமாக அதிரடியாக உயர்த்தினார். இதன் மூலம் அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும்  இவர் திகழ்ந்தார்.

ஆனாலும் முதலில் ஒரு கோடி சம்பளம் வாங்கிய நடிகர் இவர்தான் என நிறைய பேர் நினைத்துக் கொண்டிருப்போம். அது உண்மை இல்லை. இந்த சாதனை 90 காலகட்டத்தில் ஒரு தென்னிந்திய நடிகரால் முறியடிக்கப்பட்டது. அவர் வேறு யாரும் இல்லை தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி தான் அந்த சிறப்புக்கு உரியவர் . இவர் 1992 -ஆம் ஆண்டு நடித்த “ஆபத்பாந்தவுடு” என்ற படத்திற்காக ரூ 1.25 கோடி சம்பளம் பெற்றுள்ளார். இதன் மூலம் ஒரு கோடி சம்பளம் வாங்கிய முதல் இந்திய நடிகர் என்ற பெருமையை இவர் பெற்றார்.

அப்போது கோலிவுட்டில் முன்னணி நடிகர்களான கமல் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோர் ஒரு படத்திற்கு ரூ 60- 80 லட்சம் வரை சம்பளம் வாங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகிய இருவரும் 1994 ஆம் ஆண்டு ஒரு கோடி சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியலில் இணைந்துள்ளனர்.

தற்போதைய சூழ்நிலையில் ரூ.40 கோடி சம்பளமாக ஒரு படத்திற்கு சிரஞ்சீவி வாங்குவதாக தெரியவந்துள்ளது. 69 வயதாகும் சிரஞ்சீவி மல்லடி வசிஷ்டா  இயக்கும் சிரஞ்சீவி விஷ்வம்பரா என்ற படத்தில் நடிக்கிறார். இதில் திரிஷா 18 வருட இடைவெளிக்கு பின் சிரஞ்சீவியுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 10-ஆம்தேதி வெளியாக உள்ள இந்த திரைப்படத்தில் இவர்களுடன் மீனாட்சி சவுத்ரி, சுரபி, இஷா சாவ்லா, ஆஷிகா ரங்கநாத், போன்றவர்களும் நடிக்கிறார்கள்.