சமீபத்தில் இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது குறித்து பேசுவதற்காக அண்ணாமலை டெல்லி பயணம் மேற்கொண்டார். இவரை அடுத்து உடனடியாக கேசவ விநாயகம் அமித்ஷாவை சந்திக்க சென்றார். இவை அனைத்தும் ஓர் முக்கோண வடிவமாக மூவரையும் இணைத்தது. அண்ணாமலை ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் அரசியல் சார்ந்து 14 வாரங்கள் படிக்க செல்ல உள்ளார்.
இந்த நிலையில் புதிய பாஜக மாநில தலைவராக யார் நியமிக்கப்படுவார் என்ற கேள்வி எழுந்து வந்தது. இதில் முதல் மூன்று இடத்தில் தமிழிசை சௌந்தர்ராஜன், வானதி சீனிவாசன் கேசவ விநாயகம் உள்ளிட்டோர் இருந்தனர். குறிப்பாக இவர் இல்லாத 14 வாரத்தில் அதிமுகவுடன் இணைய தமிழிசை கட்டாயம் உதவி புரிவார் என்று எண்ணினர். ஆனால் தமிழிசை, நிரந்தர தமிழக பாஜக தலைவராக இருக்கவே விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனால் அடுத்த கட்டமாக கேசவ விநாயகத்தை நியமிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேற்கொண்டு கட்சியை எப்படி வழிநடத்த வேண்டும் அதற்குரிய திட்டங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். அதுமட்டுமின்றி முக்கிய கூட்டங்களில் கலந்துகொள்ளும் வகையில் அண்ணாமலை காணொளி வாயிலாக இணைந்து கொள்வார் என்றும் கூறுகின்றனர். அண்ணாமலை தமிழகம் இல்லாத இந்த 14 வாரத்தில் கேசவ விநாயகம் அடுத்த தலைவராக நியமிக்க பாஜக முடிவெடுத்துள்ளதாக கூறுகின்றனர்.