Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தமிழ் சினிமாவில் இவர்தான் நம்பர் ஒன் நடிகர்! அப்போது இரண்டாவது இடம் யாருக்கு?

He is the number one actor in Tamil cinema! So who got the second place?

He is the number one actor in Tamil cinema! So who got the second place?

தமிழ் சினிமாவில் இவர்தான் நம்பர் ஒன் நடிகர்! அப்போது இரண்டாவது இடம் யாருக்கு?

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர்கள் நடிகர் விஜய்,அஜித் மற்றும் சூர்யா.சூர்யாவிற்கு சூரறைப் போற்று என்ற திரைப்படத்திற்கு கடந்த ஆண்டு தேசிய விருது கிடைத்தது. அதுமட்டுமின்றி அதே படத்திற்காக பிலிம் பேர் உள்ளிட்ட விருதுகளும் நடிகர் சூர்யாவிற்கு கிடைத்தது. அதனைத்தொடர்ந்து நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் ஜெய் பீம். இந்த படத்திற்கும் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது மற்றும் விருதுகளும் கிடைத்தது.

இந்நிலையில் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் ஹியூமன் பிராண்ட்ஸ் என்ற அமைப்பு சிறந்த நடிகர் யார் என கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது. இந்த கருத்துக்கணிப்பு தென் இந்தியாவில் சுமார் 5000 நபரிடம் நடத்தப்பட்டது. அந்த கருத்து கணிப்பு முடிவில் தென்னிந்தியாவில் நடிகர் சூர்யா தான் நம்பர் ஒன் நடிகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மேலும் நடிகர் விஜய் இரண்டாவது இடத்தில் உள்ளார்.அதனையடுத்து மலையாள சினிமாவில் பகத் பாஸில் மற்றும் துல்கர் சல்மான் ஆகியோர் முதலிடத்தை பிடித்துள்ளனர். தெலுங்கு சினிமாவில் நடுகற் அல்லு அர்ஜுன் முதலிடத்தில் உள்ளார். தமிழில் விஜய் தான் நம்பர் ஒன் என பேசப்பட்டு வந்த நிலையில் நடிகர் சூர்யா தான் நம்பர் ஒன் என கருத்து கணிப்பு கூறியுள்ளது.

Exit mobile version