Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஜஸ்டின் பைபர் ட்விட்டரில் பின்பற்றும் ஒரே இந்தியர் இவர் தானாம்!

உலகெங்கும் ஜஸ்டின் பைபர் பெயர் சொன்னால் தெரியாதவர் எங்கும் இல்லை. இவர் பிரபலமான பாப் பாடகர் ஆவார்.உலகளவில் அதிக அதிகமான ரசிகர்களை கொண்ட ஒரே பாடகர் ஜஸ்டின் பைபர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் ரசிகர்களிடம் எளிதில் பழகும் விதமே இவருடைய உச்சத்திற்கு காரணம். இதற்காகவே இவர் ஏகப்பட்ட ரசிகர்களை கொண்டுள்ளார்.இவர் இதுவரை கிட்டத்தட்ட இரண்டு லட்சத்திற்கும் மேலான நபர்களை ட்விட்டர் பக்கத்தில் ஃபாலோ செய்கிறார்.

நம்ம ஊரில் உள்ள சாதாரண ஹீரோக்கள் கூட ரசிகர்களை ட்விட்டரில் பின்பற்ற மாட்டார்கள்.ஆனால் உலகமே அறிந்த ஜஸ்டின் பைபர் என்று லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் பின் தொடர்கிறான் என்பது மிகவும் ஆச்சரியம் ஊட்டும் ஒன்றாகும்.

ஜஸ்டின் பைபர் பக்கத்தில் ஃபாலோ செய்பவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 133 மில்லியன் என்பது குறிப்பிடத்தக்கது. ஜஸ்டின் பைபர் இதுவரை இந்தியாவில் எந்த ஒரு பிரபலத்தையும் பின் தொடரவில்லை. 

ஆனால் ஜஸ்டின் பைபர் பின்பற்றும் ஒரே ஒரு இந்திய நபர் அதுவும் தமிழ்   இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்  என்ற தகவல் கிடைத்துள்ளது. சமீபத்தில் ஜிவி பிரகாஷ் High & Dry என்ற ஹாலிவுட் ஆல்பம் ஒன்றை வெளியிட்டார்.உலகம் முழுவதும் ரசிகர் பட்டாளத்தை தனக்கென உருவாக்கினார்.

இந்தப் பாடலுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் பேர் ஆதரவு கொடுத்து வருகின்றனர். இந்தப் பாடலைக் கேட்ட பிறகு ஜஸ்டின் பைபர் உடனடியாக ஜிவி பிரகாஷ்  ட்விட்டரில் தேடி தொடர்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version