Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நான் திரைகளுக்கு வர காரணமே இவர் தான்!! அமரன் பட இயக்குனர்!!

He is the reason I came to screens!! Amaran film director!!

He is the reason I came to screens!! Amaran film director!!

அமரன் படம் தொடர்ந்து வெற்றிக் கண்டு தற்சமயம் அப்படத்தின் நூறாவது வெற்றி நாளை நோக்கி பயணம் செய்து வருகின்றது. இந்த மகிழ்ச்சி நேரத்தில் இப்பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி அவருடைய எக்ஸ் வலைதள பக்கத்தில் தனது திரைப்படம் எடுக்கும் ஆசை வந்ததற்கே காரணம் மணிரத்தினம் சார் தான் என்று பதிவிட்டுள்ளார். மேலும் அவர், மணிரத்தினம் சாரை நேரில் சந்தித்து அவருடன் ஒரு புகைப்படத்தையும் எடுத்து இதனை ஷேர் செய்துள்ளார்.

அவர் அப்பதிவில் கூறியதாவது, நான் திரையில் இருக்கு வர காரணமே மணிரத்தினம் சார்தான்! கடநண்த 2005 ஆம் ஆண்டு இவருடன் இணைந்த போட்டோ ஒன்றை நான் தொலைத்து விட்டேன். இப்பொழுது என்னுடைய இந்த கனவானது, இரண்டு தசாப்தங்களை (வெற்றி படங்களை) தாண்டி தான் நிறைவேறப்பட்டுள்ளது. அவர் அருகில் நான் வாய் பேச முடியாத நிலையில் திகைத்து நின்று எடுத்த படம் என்று அவர் மனம் மகிழ்ச்சியை ஷேர் செய்து உள்ளார். மேலும், அமரன் பட வெற்றியை பாராட்டியதற்கு நன்றி சார்! என்று மனதார கூறியுள்ளார்.

Exit mobile version