அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்திலிருந்து நேற்று வாஷிங்டன் நகருக்கு ஒரு விமானம் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக அந்த விமானம் கன்சாஸ் சிட்டி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
அந்த விமானம் ஏன் அங்கேயே தரையிறக்கப்பட்டதென்றத்தவகவல் தற்போதுதான் வெளியாகியுள்ளது அதாவது விமானத்தில் அதிர்ச்சி தரக்கூடிய சம்பவமொன்று அரங்கேறியிருப்பது தெரியவந்திருக்கிறது.
அதாவது விமானம் பறந்து கொண்டிருந்த சமயத்தில் விமானத்தில் உள்ள ஒரு பயணி விமானியின் அறைக்குள் நுழைந்திருக்கிறார். அங்கிருக்கும் கட்டுப்பாட்டு பட்டனை பயன்படுத்தி விமானத்தின் ஒரு கதவை திறக்க முயற்சித்தார் இதனை சற்றும் எதிர்பாராத விமானி சுதாரித்து கொண்டு அவரை தடுத்தாரென்று தெரிவிக்கப்படுகிறது.
உடனடியாக அங்கு வந்த விமான பணிப்பெண்கள் மற்றும் மற்ற பணியாளர்கள் அவரை கட்டுக்குள் கொண்டுவர முயற்சித்தார்கள். ஒரு விமான பணியாளர் அந்த நபரின் தலையில் காபி கோப்பையினால் அடித்து அவரைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தாரென்று தெரிவிக்கப்படுகிறது.
விமானத்தில் நடைபெற்ற இந்த சம்பவத்தை மத்திய புலனாய்வு அமைப்பு உறுதி செய்திருக்கிறது. விமானம் தரையிறங்கியப்பின்னர் மத்திய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் அந்த நபரை கைது செய்து அழைத்துச் சென்றுள்ளார்கள், அதோடு விசாரணையும் நடைபெற்று வருகிறது.
சென்ற வருடத்தில் மட்டும் அமெரிக்காவின் மத்திய விமான சேவை நிர்வாகம் இதுபோன்று 5981புகார்களை பதிவு செய்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அவற்றுள் 4290 புகார்கள் விமானத்தில் முக கவசம் அணியாமல் பயணம் செய்தது குறித்தவையாகுமென்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.