Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அந்த பொருளை வாங்க பணம் தரவில்லை என கத்தி குத்து! சிறுவன் உட்பட மூன்று பேர் கைது!

He stabbed me as he did not give me money to buy that item! Three people, including the boy, were arrested!

He stabbed me as he did not give me money to buy that item! Three people, including the boy, were arrested!

அந்த பொருளை வாங்க பணம் தரவில்லை என கத்தி குத்து! சிறுவன் உட்பட மூன்று பேர் கைது!

கோவை மாவட்டம் கெம்பட்டி காலனியை சேர்ந்தவர் அஜித் என்கின்ற ரவிக்குமார். இவர் நகை பட்டறையில்  ஊழியராக பணிபுரிந்து வருகிறார். விநாயகர் சதுர்த்தியையொட்டி அதே பகுதியை சேர்ந்த மணி உட்பட மூன்று பேர் ரவிக்குமாரிடம் நன்கொடை கேட்டுள்ளனர்.

ஆனால் ரவிக்குமார் நன்கொடை கொடுபதற்க்கு மறுத்துள்ளார். அதனையடுத்து கடந்த ஐந்தாம் தேதி இரவு ரவிக்குமார் கெம்பட்டிகாலனியில் உள்ள பொதுகழிப்பிடம் அருகே நின்று கொண்டிருந்தார்.

அப்போது மணி மற்றும் அவருடைய நண்பர் சிலர் அங்கு வந்து ரவிக்குமாரிடம் மதுகுடிக்க பணம் தரும்படி கேட்டுள்ளனர். அப்போது ரவிக்குமார் பணம் இல்லை என கூறியுள்ளார் அதனால் ஆத்திரம் அடைந்த மணி மற்றும் அவருடைய நண்பர்கள் ரவிக்குமாரை தாக்கியுள்ளனர். மேலும் ரவிக்குமாரை கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.

அதில் காயமடைந்த ரவிக்குமாரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்க சேர்த்துள்ளனர். இதுகுறித்து போலீசார்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மணி ,சபரிமணி மற்றும் 17 வயதுடைய சிறுவன் ஆகியோரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version