அண்ணாமலை குறித்த கேள்விக்கு கடுப்பான எடப்பாடியார்!

0
174
#image_title
அண்ணாமலை குறித்த கேள்விக்கு கடுப்பான எடப்பாடியார்!
அதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு கடுப்பாக பதிலளித்தார்.
மதுரைக்கு திருமண விழாவிற்கு வருகை வந்த எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் மதுரை விமான நிலையத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கூட்டணி குறித்து பிரதமர் மோடி, அமித்ஷா, ஜே.பி.நட்டா உடன் மட்டுமே பேச்சு என்றும் மேல பாஸ் இருக்கும்போது, கீழ இருப்பவரை பத்தி எதுக்கு பேச வேண்டும் என்று கேள்வி எழுப்பினார்.
இதைத்தொடர்ந்து பேசிய எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள், 12 மணி நேர வேலை சட்ட மசோதாவுக்கு திமுகவின் கூட்டணி கட்சிகளே எதிர்ப்பதாகவும் கூறினார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களுக்கும், அஇஅதிமுக கட்சியினருக்கும் இடையே விரிசல் உண்டு என்பது தற்போது வெளிப்படையாக தெரியவந்துள்ளது. அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைப்பது அதிமுகவினருக்கு பிடிக்கவில்லையே என்று கூறப்பட்ட நிலையில், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் பதில் இதை நிரூபித்து விட்டது.
பிரதமர் நரேந்திர மோடி உள்துறை அமைச்சர் அமித்ஷா இருவரின் வேண்டுகோளுக்கிணங்க தற்போது வரை அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்து இருப்பதாக கூறப்படுகிறது.
விரைவில் தமிழக பாஜக தலைவர் பொறுப்பில் இருந்த அண்ணாமலை நீக்கப்படுவார் என்றும் அப்பதவியில் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் பரிந்துரைக்கும் நபர் தலைவர் பொறுப்பை ஏற்பார் என்றும் அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.