Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பெண்ணின் தலையில் ஊறிய பேன்! திடீரென்று தரையிறக்கப்பட்ட விமானம்! 

Head lice of the woman! The plane suddenly landed!

Head lice of the woman! The plane suddenly landed!

பெண்ணின் தலையில் ஊறிய பேன்! திடீரென்று தரையிறக்கப்பட்ட விமானம்!
பெண் பயணி ஒருவரின் தலைமுடியில் பேன் ஊறியதற்காக நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பெரும் ஆச்சரியத்தையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக விமானங்கள் நடுவானில் பறந்து கொண்டிருக்கும் பொழுது தொழில்நுட்ப கோளாறுகள் ஏதாவது ஏற்பட்டால் அவசர அவசரமாக தரையிறக்கப்படும். அது மட்டுமில்லாமல் பயணிகளுக்கு எதாவது அவசர உதவி தேவைப்பட்டாலோ அல்லது நடுவானில் பறந்து கொண்டிருக்கும் பொழுது வானிலை திடீரென்று மோசமடைந்தாலோ அல்லது வேறு சில காரணங்களால் கூட விமானங்கள் தரையிறக்கப்படும். ஆனால் தலையில் பேன் ஊறியதற்காக விமானம் தரையிறக்கப்பட்டது பெரும் ஆச்சரியத்தை உருவாக்கி இருக்கின்றது.
உலக அளவில் விமான சேவைகளை வழங்கி வரும் நிறுவனங்களில் ஒன்றான அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் இருந்து நியூயார்க் நகரத்திற்கு புறப்பட்டது.
விமானம் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் நடுவானில் பறந்து கொண்டிருந்த நிலையில் பெண் பயணி ஒருவரின் தலைமுடியில் பேன் ஒன்று ஊறிக் கொண்டிருந்தது. இதை பார்த்த மற்ற. பயணிகள் உடனே விமானத்திலிருக்கும் ஊழியர்களிடம் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம் அவசர அவசரமாக பீனிக்ஸ் நகரத்தில் தரையிறக்கப்பட்டது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து அந்த விமானத்தில் பயணித்த ஈதன் ஜூடெல்சன் என்பவர் சமூக வலைதளத்தில் விமானம் தரையிறக்கப்பட்டது குறித்து தற்பொழுது பகிர்ந்துள்ளார்.
இது குறித்து ஈதன் ஜூடெல்சன் அவர்கள் “விமானம் தரையிறக்கப்படுவதை குறித்து விமான உழியர்கள் எதையும் தெரிவிக்கவில்லை. விமானம் மீண்டும் திருப்பி விடுவதாக மட்டுமே விமான உழியர்கள் அறிவித்தனர்.
ஆனால் ஏன் திடீரென்று விமானம் திருப்பி விடப்படுகின்றது என்பது குறித்து பயணிகளுக்கு மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. நானும் அனைவரையும் பார்த்தேன். யாரும் பயப்படாமல் பதற்றமில்லாமல் இருந்தனர்.
பின்னர் விமானம் திடீரென்று பீனிக்ஸ் நகரில் தரையிறக்கப்பட்டது. இதையடுத்து இதற்கு என்ன காரணம் என்பது குறித்து மற்ற பயணிகளிடம் கேட்டபோது தான் பெண் தலையில் உள்ள முடியில் பேன் இருந்ததால் விமானம் தரையிறக்கப்பட்டது என்று மற்ற பயணிகள் கூறினர். இந்த சம்பவம் மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது” என்று கூறினார்.
Exit mobile version