அல்சர் புண்களை குணமாக்கி கொள்ள இங்கு சொல்லப்பட்டுள்ள வீட்டு வைத்திய குறிப்பை பின்பற்றுங்கள்.
அல்சர் புண்கள் ஆற வீட்டு வைத்தியங்கள்:
மணத்தக்காளி கீரை
பாசிப்பருப்பு
தேங்காய் பால்
மணத்தக்காளி கீரை என்றாலே அவை அல்சர் புண்களை ஆற்றும் மாமருந்து என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.வாய் மற்றும் வயிற்றுப் பகுதியில் உண்டாகும் புண்களை குணப்படுத்திக் கொள்ள இந்த கீரையை நம் முன்னோர்கள் மருந்தாக பயன்படுத்தி வந்தனர்.
தற்பொழுது அல்சருக்கு சிகிச்சை இருந்தும் அவற்றை குணப்படுத்துவது சவாலாக இருக்கும் நிலையில் நம் முன்னோர்கள் பின்பற்றி வந்த மருத்துவத்தின் மூலம் எளிதில் புண்களை ஆற்றிக் கொள்ள முடியும்.
இதற்கு நீங்கள் முதலில் ஒரு கட்டு மணத்தக்காளி கீரையை வாங்கி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.பிறகு பொடியாக நறுக்கி பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி அலசி சுத்தம் செய்ய வேண்டும்.
பிறகு 25 கிராம் பாசிப்பருப்பை கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி அலசி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.பிறகு இதை பாத்திரத்தில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்ற வேண்டும்.இதனுடன் நறுக்கிய மணத்தக்காளி கீரையை போட்டு நன்கு வேக வைக்க வேண்டும்.
பிறகு இதை மசித்து வைத்துக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு ஒரு மூடி தேங்காயை துருவி மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்து பால் எடுத்துக் கொள்ள வேண்டும்.இந்த தேங்காய் பாலை வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் இந்த தேங்காய் பாலை மணத்தக்காளி பாசிப்பருப்பு கலவையில் ஊற்றி வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.இப்படி வாரத்தில் மூன்றுமுறை செய்து சாப்பிட்டு வந்தால் வாய் மற்றும் வயிற்றுப்புண்கள் ஆறும்.
மற்றொரு தீர்வு:
மாசிக்காய் பொடி
தேன்
நாட்டு மருந்து கடையில் மாசிக்காய் பொடி கேட்டால் கிடைக்கும்.இதை தங்களுக்கு தேவையான அளவு வாங்கிக் கொள்ளவும்.
பின்னர் காலை நேரத்தில் ஒரு தேக்கரண்டி அளவு மாசிக்காய் பொடி எடுத்து சிறிது தேன் சேர்த்து குழைத்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் மற்றும் வயிற்றுப்புண் குணமாகும்.அதேபோல் தேங்காய் பாலில் கற்கண்டு பொடி கலந்து குடித்து வந்தால் அல்சர் புண்கள் விரைவில் ஆறும்.