Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

காகங்களுடன் உரையாடிக் கொண்டிருந்த சுகாதாரத்துறை அமைச்சர்! மனைவியின் கிளிக் என்று ட்விட்டரில் பதிவு!

 

சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் ட்விட்டரில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அவர் உடற்பயிற்சி செய்துவிட்டு காயங்களுடன் போராடிக் கொண்டிருப்பதே அவர் மனைவி படமாக எடுத்துள்ளார். அதை டுவிட்டரில் வெளியிட்டு, ” தற்போது நான் ஓடி முடித்து காயங்களுடன் அளவளாவிக்கொண்டிருந்ததை என் துணைவியார் கிளிக் செய்து உள்ளார்” என்று ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

காகத்திற்கு அவர் உணவு வைத்ததும் ஏகப்பட்ட காகங்கள் அவர் பக்கம் அமர்ந்து உணவு உண்ணும் காட்சியைத் மா சுப்பிரமணியன் அவர்களின் துணைவியார் அப்படியே படம் எடுத்துள்ளார். இதை சுகாதாரத்துறை அமைச்சர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

இவ்வளவு பிஸியான நேரத்திலும் உடற்பயிற்சி மற்றும் தம் உடலை பேணிக் காக்கும் பயிற்சிகள் அனைத்தும் முக்கியமானவை என்பதை உணர்த்துவதற்காக இந்த பதிவு என்று மற்றவர்கள் பேசி வருகின்றனர்.

Exit mobile version