கொரோனாவை கட்டுப்படுத்த வழி என்ன? அமைச்சர் வெளியிட்ட ஆடியோ

0
116
TN Govt Announces Corona Treatment Fee For Private Hospitals-News4 Tamil Online Tamil News

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,25,282 இருந்து 4,40,215 ஆக அதிகரித்து உள்ளது.மேலும் உயிர் இறந்தவர்களின் எண்ணிக்கையானது 13,699ல் இருந்து 14,011 ஆக அதிகரித்து உள்ளது.

கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வரும் நிலையில் நேற்று மட்டும் தமிழகத்தில் 2516 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.மேலும் தமிழ்நாட்டில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 64,603 பேர் எனவும்,உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 833 ஆகவும் மற்றும் பாதிப்பிலிருந்து குணமடந்தவர்களின் எண்ணிக்கை 35,339 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது குறித்து விஜய பாஸ்கர் டிவிட்டரில் வெளியிட்டுள்ள ஆடியோ ஒன்றில் “கொரோனா வைரசுக்கு எதிராக அனைவரும் போராடி வரும் நிலையில் இரண்டு விஷயங்களை நாம் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும் மற்றும் வெளியில் சென்று விட்டு வரும்போது கைகளை நன்கு கழுவ வேண்டும்.

இந்த கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசி மற்றும் மருந்துகள் இல்லாத நிலையில் சுயக்கட்டுபாடுகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்” என அந்த ஆடியோவில் அவர் தெரிவித்துள்ளார்.