Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தமிழ்நாடு பொது சுகாதார துறையில் காத்திருக்கும் வேலை வாய்ப்பு! அரசு பணியாளர்கள் தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பு!

தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி பொது சுகாதார துறையில் சுகாதார அலுவலர்களுக்கான காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறையை தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.

பணியின் விவரங்கள்:

பணியின் பெயர் தமிழ்நாடு பொதுச் சுகாதாரப் பணிகள் சுகாதார அலுவலர்
காலியாகவுள்ள பணியிடங்கள் 12
வயது வரம்பு அதிகபட்சமாக 37 வயது இருக்க வேண்டும். SC/ST,MBC/DC/BC(OBCM0),BCM,Destittute widow விற்கு வயது வரம்பு கிடையாது.
சம்பளம் ரூ.56,900 – 2,09,200 (நிலை – 23)

பணிக்கான கல்வித்தகுதி:

தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் அல்லது இந்திய மருத்துவ கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட வேறு ஏதாவது பல்கலைக்கழகம் வழங்கிய எம் பி பி எஸ் பட்டம் பெற்று இருக்க வேண்டும். தமிழ்நாடு மருத்துவ அங்கீகரிப்பு விதிமுறைகளின் படி பதிவு செய்திருக்க வேண்டும். அதோடு, பொது சுகாதாரத்தில் டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை

கணினி வழி எழுத்து தேர்வு மூலமாக தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதோடு உடல் தகுதி சான்றிதழ், தமிழ் மொழியில் தகுதி போன்றவை தேவை என்றும் சொல்லப்படுகிறது.

தேர்வுக்கான கட்டணம்

நிரந்தர பதிவு கட்டணம் ரூபாய் 150

தேர்வுக்கான பதிவு கட்டணம் ரூபாய் 200

விண்ணப்பிக்கும் முறை

இந்த பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

ஆன்லைனில் விண்ணப்பிக்க முகவரி apply. tnpscexams.in

முக்கிய நாட்கள்:

நிகழ்வுகள் நாட்கள்
அறிவிப்பு வெளியான நாள் 21.10.2022
ஆன்லைனின் விண்ணப்பிக்கக் கடைசி நாள் 19.11.2022
இணையவழி விண்ணப்பத்தைத் திருத்தம் செய்வதற்கான காலம் 24.11.2022 நள்ளிரவு 12.01 மணி முதல் 26.11.2022 இரவு 11.59 மணி வரை.
கணினி வழித் தேர்வு நாள் 13.02.2023

Exit mobile version