எலி கடித்த தர்பூசணியில் குளு குளு ஜூஸ்!! உணவு பாதுகாப்பு ஆணையரின் அதிரடி நடவடிக்கை!!
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மகாலிங்கபுரம் பகுதியில் வரிசையாக தர்பூசணி கடைகள் இயங்கி வருகிறது. இந்த நிலையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கடந்த சில நாட்களாகவே கோயம்பேடு உள்ளிட்ட பல இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
அதில் குறிப்பாக மாம்பழங்கள் ரசாயன கற்கள் வைத்து பழுக்க வைக்கப்படுவதாக வந்த தகவலின் படி இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
இந்த பழங்களை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உட்கொள்ளும் போது பலவிதமான உடல் பிரச்சினைகள் உருவாகின்றது.
இதனை தடுப்பதற்காக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தொடர்ச்சியாக பழக்கடைகளில் சோதனை மேற்கொள்ளது மட்டுமில்லாமல் கற்கள் வைத்து பழுக்கப்படுகின்ற அந்த பழங்களையும் பறிமுதல் செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று நுங்கம்பாக்கத்தில் உள்ள 20 க்கும் மேற்ப்பட்ட தர்பூசணி கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டதில் பல தர்பூசணிகள் சுகாதாரமற்ற இடத்தில் வைத்துள்ளதாகவும், மேலும் எலி கடித்த தர்பூசணி கரப்பாம்பூச்சிகள் உள்ள தர்பூசணி உள்ளிட்ட பழங்களை ஜூஸ் போட்டு பொது மக்களுக்கு கொடுத்து இருப்பதாகவும் தகவல் வெளிவந்திருக்கிறது.
இதனை கண்ட உணவு பாதுகாப்பு ஆணையர் லால்வீனா தலைமையிலான அதிகாரிகள் 1.50 டன் தர்பூசனி பழங்களை பறிமுதல் செய்தவுடன் அவர்களுக்கு எச்சரிக்கை நோட்டீசும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் உடனடியாக அபராத தொகையும் விதிக்கப்பட்டுள்ளது.