சேலம் மாவட்டத்தில் இருக்கின்ற குமாரமங்கலம் அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அந்த சந்திப்பின்போது அவர் தெரிவித்ததாவது தமிழ்நாட்டில் இருக்கின்ற 17 மாவட்டங்களில் நோய்த்தொற்று பரவல் வெகுவாக குறைந்திருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.
தமிழ்நாட்டிற்கு தேவைப்படும் ஆக்சிஜன் தொடர்வண்டிகள் மூலமாக வருகை தருகிறது. ஆக்சிஜன் பற்றாக்குறை உண்டான காரணத்தால், கூடுதல் சிகிச்சை மையங்கள் மற்றும் ஆக்ஸிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
நோய்த்தொற்று பரவல் அறிகுறி யாரிடமாவது தென்பட்டால் உடனே அருகில் இருக்கின்ற மருத்துவமனைக்கு சென்று சோதனை செய்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருக்கின்றார். தமிழ்நாட்டில் நோய்த் தொற்றில் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து இருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார். ஒரு நாளைய குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 32000 நபர்கள் என்று அதிகரித்திருக்கிறது என அவர் தெரிவித்திருக்கிறார்.
இவ்வாறு வெகுவாக தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருவதும் குணமானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதன் காரணமாகத்தான் தற்சமயம் முழு ஊரடங்கு ஒரு வார காலம் நீட்டிக்கப்பட இருப்பதாக தெரிவிக்கிறார்கள். ஒருவேளை இந்த ஒருவார கால ஊரடங்கு நீட்டிபினால் தமிழகம் முற்றிலுமாக நோய் தொற்றுகளில் இருந்து விடுபடலாம் என்றும் சொல்லப்படுகிறது. அவ்வாறு விடுபட்டு விட்டால் அது மிகப்பெரிய சாதனையாக இருக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்து வருகிறார்கள்.
சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்த குட்நியூஸ்!
