Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு சுகாதாரத்துறை சிறந்த உதாரணமாக திகழ்கிறது- பிரதமர் மோடி!!

#image_title

வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு சுகாதாரத்துறை சிறந்த உதாரணமாக திகழ்கிறார் பிரதமர் மோடி.

பிரதமரின் வேலைவாய்ப்பு மேளா திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதன்படி வேலைவாய்ப்பு மேளாவின் கீழ் பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் நிறுவனங்களில் புதிதாகப் பணியமர்த்தப்பட்ட சுமார் 71,000 பேருக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் மோதி காணொளி காட்சி வாயிலாக வழங்கினார்.

வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற இலக்கை அடைய நாட்டின் திறமையும் ஆற்றலும் கொண்ட இளைஞர்களுக்கு சரியான வாய்ப்புகளை வழங்க அரசு உறுதி கொண்டிருப்பதாக தெரிவித்த பிரதமர் புதிய இந்தியா கடைபிடித்து வரும் கொள்கைகளும் யுக்திகளும் நாட்டில் புதிய சாத்தியங்களுக்கும் வேலைவாய்ப்புகளுக்குமான புதிய கதவுகளை திறந்து இருப்பதாக குறிப்பிட்டார்.

கொரொனா பெருந்தொற்றுக்குப் பிறகு ஒட்டுமொத்த உலகமும் பொருளாதார மந்த நிலையை சந்தித்து வருவதோடு பெரும்பாலான நாடுகளின் பொருளாதாரம் வீழ்ச்சடைந்து வந்த போதிலும் இந்தியா வேகமாக வளரும் பொருளாதாரம் கொண்ட நாடாக இன்று உள்ளது எனவும் உலக நாடுகள் பிரகாசமான இடமாக இந்தியாவை பார்ப்பதாக குறிப்பிட்டார்.

புத்தாக்க நிறுவனங்கள் 40 லட்சம் நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகளை உருவாக்கி இருப்பதாக தெரிவித்த பிரதமர் கடந்த 9 ஆண்டுகளில் நாட்டின் விளையாட்டு துறையும் புத்துயிர் அடைந்திருப்பதாக குறிப்பிட்டார்.

நுண் பொருளாதாரத்தின் சக்தி என்று அனைவரின் முன்பும் ஆதாரமாக திகழ்வதாக குறிப்பிட்ட பிரதமர் சாமானிய மக்களின் சக்தியை பற்றி அறியாத சிலர் நுன் பொருளாதார புரட்சியை குறித்து சிலர் கேலியும் கிண்டலும் செய்து வருவதாகவும்.

வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு நாட்டின் சுகாதாரத்துறை மிகச் சிறந்த உதாரணமாக திகழ்வதாக குறிப்பிட்ட பிரதமர் 2014 க்கு முன்பு நாட்டில் 400 க்கும் குறைவான மருத்துவக் கல்லூரியில் மட்டுமே இருந்த நிலையில் இன்று ஏறத்தாழ 660 மருத்துவக் கல்லூரிகள் இருப்பதாகவும் இதற்கு முன்பு இருந்த நிலையோடு ஒப்பிடும் போது நாட்டில் உள்ள மருத்துவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காகி இருப்பதாக தெரிவித்தார்.

Exit mobile version