நமது உடலில் முக்கிய பகுதியாக திகழும் தொப்புளில் தினமும் எண்ணெய் வைத்தால் ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும்.அதன்படி தொப்புளில் ஊற்றும் எண்ணெய்களால் என்ன பலன் கிடைக்கும் என்பதை காண்போம்.
நெய்:
சுத்தமான பசு நெய்யை சிறிது சூடாக்கி தொப்புள் பகுதியில் ஊற்றி மசாஜ் செய்து வந்தால் கண் வலி மற்றும் சரும வறட்சி நீங்கும்.
கால் தேக்கரண்டிக்கும் குறைவாக நெய் பயன்படுத்த வேண்டும்.நெய் சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கும் ஒரு பொருளாகும்.
தேங்காய் எண்ணெய்:
உடலை குளிர்ச்சியாக்கும் தேங்காய் எண்ணெயை தொப்புள் குழியில் ஊற்றி மசாஜ் செய்தால் உடல் சூடு தணியும்.
சருமம் சார்ந்த பாதிப்புகள் குணமாக தேங்காய் எண்ணெயை தொப்புளுக்கு பயன்படுத்தலாம்.இளமை பொலிவுடன் இருக்க தேங்காய் எண்ணெய் உதவுகிறது.தொப்புளில் தேங்காய் எண்ணெய் விடுவதால் சரும வறட்சி நீங்கும்.
விளக்கெண்ணெய்
தொப்புளில் விளக்கெண்ணெய் ஊற்றி மசாஜ் செய்யும் பழக்கத்தை பலரும் பின்பற்றி வருகின்றனர்.உடல் சூட்டை தணிக்கும் ஆற்றல் விளக்கெண்ணெய்க்கு உண்டு.தொப்புளில் விளக்கெண்ணெய் விடுவதால் மூட்டு வலி,முழங்கால் வலி,கால் வலி போன்றவை குணமாகும்.தொப்புளில் விளக்கெண்ணெய் வைப்பதால் கண் சூடு குறையும்.
வேப்பெண்ணெய்
சரும வியாதிகள் அனைத்தையும் குணமாக்கும் ஆற்றல் வேப்பெண்ணெய்க்கு உண்டு.தொப்புள் பகுதியில் சிறிது வேப்பெண்ணெய் ஊற்றி மசாஜ் செய்து வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
வேப்பண்ணெய்யை தொப்புளில் தடவுவதால் உடலில் உள்ள நச்சுக் கழிவுகள் அனைத்தும் அழிந்துவிடும்.
ஆலிவ் எண்ணெய்
பெண்கள் சந்திக்கும் மாதவிடாய் பிரச்சனையை சரி செய்ய ஆலிவ் எண்ணெய் உதவுகிறது.மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலி குறைய ஆலிவ் எண்ணெயை தொப்புளில் ஊற்றி மசாஜ் செய்யலாம்.