Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஒரு ஸ்பூன் சாப்பிட்டால் போதும்! தொற்று கிருமிகள் அழிந்துவிடும்! சளி இருமல் மற்றும் காய்ச்சல் சரியாகிவிடும்!

ஒரு ஸ்பூன் சாப்பிட்டால் போதும்! தொற்று கிருமிகள் அழிந்துவிடும்! சளி இருமல் மற்றும் காய்ச்சல் சரியாகிவிடும்!

இதை ஒரு முறை சாப்பிட்டால் போதும் சளி இருமல் காய்ச்சல் உடனே சரியாகிவிடும்.

தொடர்ந்து வரும் கொரோனா காலகட்டத்தில் சளி,இருமல் மக்களை ஆட்டிப் படைத்து வருகிறது. இந்த மாதிரியான இயற்கையான வழிமுறைகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏற்பட்டுள்ள சளி, இருமல், காய்ச்சல் ஆகியவைகளை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

1. மிளகு – 10

2. பட்டை- 2 துண்டு

3. கிராம்பு- 6

4. ஏலக்காய்-1

5. வெல்லம்- 50 கிராம்

6. இஞ்சி ஒரு துண்டு

செய்முறை:

1. முதலில் ஒரு சிறிய பாத்திரத்தை எடுத்துக் கொள்ளவும்.

2. அதில் மிளகு 10, பட்டை இரண்டு துண்டு, கிராம்பு, ஏலக்காய் ஆகியவற்றை போட்டு மிதமான தீயில் வைத்து கருகாமல் வறுத்து கொள்ளவும்.

3. இதனை சிறிய உரலில் போட்டு நன்றாக பொடியாக்கி எடுத்துக் கொள்ளவும்.

4. இடித்த பொடியை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

5. இப்பொழுது மற்றொரு பாத்திரத்தில் வெல்லம் 50 கிராம் அளவிற்கு போட்டு மிதமான தீயில் சூடுபடுத்தவும்.

6. வெல்லம் கரைந்து வரும்பொழுது ஒரு துண்டு இஞ்சியை நன்றாக துருவி சேர்த்துக் கொள்ளவும்.

7. இடித்து வைத்த பொடியை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

8. இப்பொழுது இந்த லேகியம் தயார்.

இதை நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் சாப்பிடலாம். இது அதிக காரம் மற்றும் இனிப்பு சுவை உடையதாக இருக்கும். அதை நீங்கள் சாப்பிடும் பொழுது தொண்டைக்கு இதமாக இருமல், சளி, காய்ச்சல் ஆகியவற்றை உடனடியாக கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது.

இதனைத் தொடர்ந்து ஐந்து நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம். பயன்படுத்திப் பயன் பெறுங்கள்.

Exit mobile version