Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வீட்டிலிருக்கும் இந்த 3 பொருட்கள் போதும்! எந்த மாதிரி சளியும் மலத்தின் வழியே வெளியேறிவிடும்

வீட்டிலிருக்கும் இந்த 3 பொருட்கள் போதும்! எந்த மாதிரி சளியும் மலத்தின் வழியே வெளியேறிவிடும்

 

தற்போது பெய்து வரும் கனமழையால் நீரினால் பரவ கூடிய நோய்கள் தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது. அந்த வகையில் அது போன்ற நோய்களிடமிருந்து நம்மையும் சுற்றியுள்ளவர்களையும் தற்காத்து கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

 

பருவமழை காலத்தால் தற்பொழுது அனைத்து இடத்திலும் குளிர் மழையாகவே உள்ளது. இச்சமயத்தில் மழையில் நனைந்து விட்டாலோ அல்லது சிறிதளவு இனிப்பு சாப்பிட்டு விட்டால் கூட ஒரு சிலர் உடம்பிற்கு ஒத்துக் கொள்ளாது.

 

சளி இருமல் காய்ச்சல் தொண்டை கரகரப்பு என அடுத்தடுத்த பிரச்சனையை கொண்டு வந்து விட்டு விடும். அந்த வகையில், சளி உள்ளவர்கள் வீட்டில் இருக்கும் இந்த பொருட்களை வைத்து இந்த கஷாயத்தை குடித்தால் போதும் அனைத்து சளியும் மலத்தின் வழியே வந்துவிடும்.

 

தேவையான பொருட்கள்:

 

1. துளசி – சிறிதளவு

2. கற்பூரவள்ளி – எட்டு இலை

3. ஏலக்காய் – 1

4.சுக்கு

5.ஓமம்

 

செய்முறை:

 

அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி சூடு படுத்த வேண்டும். அதனுடன் துளசி இலை, ஓமவல்லி இலைகளை சேர்க்க வேண்டும்.

 

மேலும் அதனுடன் ஏலக்காய் மற்றும் சுக்கையும் சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும்.

 

இதனுடன் சிறிதளவு ஓமம் சேர்க்க வேண்டும். இதனுடன் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும். இது கிருமி நாசினியாக பயன்படும்.

 

நன்றாக கொதிக்க விட்ட பிறகு இதனை வடிகட்டி மிதமான சூட்டில் குடிக்க வேண்டும். இதனை கொடுத்து வர விட்ட சளி இருந்தாலும் மலத்தின் வழியே வெளியேறிவிடும்.

Exit mobile version