Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்த பட்டையை மட்டும் தேங்காய் எண்ணையில் கலந்து தடவுங்க! முடி காடு மாதிரி வளரும்

Health Tips for good hair

Health Tips for good hair

இந்த பட்டையை மட்டும் தேங்காய் எண்ணையில் கலந்து தடவுங்க! முடி காடு மாதிரி வளரும்

பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களுக்கும் முடி கொட்டாமல் நன்றாக வளர வேண்டும் என்ற ஆசையுண்டு. அந்த வகையில் எல்லோருக்குமே முடி காடு மாதிரி நல்ல அடர்த்தியாக வளர வேண்டும் என்கிற ஆசை இருக்கத் தான் செய்கிறது. ஆனால் தற்போதைய சூழலில் நாம் சாப்பிடும் உணவு முறை பழக்கம் மற்றும் சுற்றுச்சூழல் மாற்றத்தினால் தலைமுடி உதிர்வது என்பது சகஜமாக போய்விட்டது.

தலைமுடி தானே போனால் போகட்டும் என்று அலட்சியமாக விட்டவர்கள் பலரும், நாளடைவில் முன்கூட்டியே யோசித்து இருக்கலாமோ? முன்கூட்டியே கவனித்து இருக்கலாமோ? என்று தற்போது புலம்புவதையும் காண முடிகிறது. எனவே தலை முடி அதிகமாக உதிர ஆரம்பித்தால் ஆரம்பத்திலேயே இங்கு கூறப்படும் இந்த விஷயத்தை நீங்கள் கடைப்பிடித்து வருவதனால் உடனடியாக கட்டுப்படுத்தி விட முடியும்.

அப்படியே முடி இழந்த பின்பும் கவலை இல்லாமல் இந்த எண்ணெயை தடவி பாருங்கள், நல்ல ஒரு ரிசல்ட் கிடைக்கும். மீண்டும் உதிர்ந்த இடத்தில் முடியை வளர வைக்கக்கூடிய சக்தி இந்த பட்டைக்கு உண்டு. இது நாட்டு மருந்து கடைகளில் மட்டுமே கிடைக்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது.

குறிப்பாக நம்மில் பலருக்கும் இருக்கும் பிரச்சனைகளான தலைமுடி உதிர்வு, தலைமுடி அடர்த்தி குறைதல், நீண்ட வளர்ச்சி இன்மை, நரைமுடி, இளநரை ஆகிய அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து கட்டக்கூடிய இந்த அற்புதமான எண்ணெயை எப்படி தயாரிப்பது? என்பதை இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம்.

இந்த எண்ணையை தயாரிக்க உதவும் அந்த பட்டையின் பெயர் ‘வேம்பாளம் பட்டை’ என்று கூறப்படுகிறது. இந்த வேம்பாளம் பட்டையானது பண்டைய காலத்தில் இருந்தே தலைமுடி உதிர்வதற்கு மற்றும் சிகப்பு நிறத்திற்கு தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து பயன்படுத்தி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இது நாளடைவில் மக்களிடையே தெரியாமல் மறைந்து விட்டது.

முடி வளர்வதற்கு நம் முன்னோர்கள் பயன்படுத்திய இந்த வேம்பாளம் பட்டையானது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். உங்களுக்கு தேவையான அளவு வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு கைப்பிடி பட்டை துண்டுகளை எடுத்துக் கொள்ளுங்கள். அதை 100ml அளவிற்கு தேங்காய் எண்ணெயில் போட்டு ஊற வைத்து விடுங்கள். ஒரு நாள் முழுவதும் தேங்காய் எண்ணையில் நன்கு ஊறிய பிறகு அந்த தேங்காய் எண்ணெய் சிவப்பு நிறத்தில் மாறியிருக்கும்.

பிறகு இந்த எண்ணையை நன்கு வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள். வடிகட்டிய இந்த தேங்காய் எண்ணெயை நீங்கள் தினமும் எப்பொழுதும் போல தலைக்கு தேய்த்து மசாஜ் செய்து வர வேண்டும். இதனைத்தவிர வேறு எதையுமே நீங்கள் செய்ய வேண்டாம், இந்த வேம்பாளம் பட்டையில் இருக்கும் சாறு முழுவதும் தேங்காய் எண்ணெயில் இறங்கி இருக்கும். இது தலைமுடியின் வேர்க்கால்களில் இருக்கும் தொற்றுகளை நீக்கும். அது மட்டும் அல்லாமல் விடாப்பிடியான பொடுகுகளை கூட ஒழித்துக் கட்டிவிடும் ஆற்றலும் இந்த பட்டையில் ஊறிய எண்ணைக்கு உள்ளது.

மேலும் இன்று பலருக்கும் இருக்கும் இளநரை, நரை முடி போன்ற பிரச்சினைகளையும் சரி செய்து நல்ல ஒரு நிறத்தை தலைமுடிக்கு கொடுக்கும். அது மட்டும் அல்லாமல் வேர்க்கால்களை சுத்தம் செய்து தொற்றுகள் இல்லாமல் மீண்டும் உதிர்ந்த இடத்தில் இருந்து புதிய முடியை வளர செய்யும் அற்புதமான ஆற்றல் இந்த வேம்பாளம் பட்டைக்கு உண்டு.

முடி வளர நாம் எதை எதையோ இதுவரை செய்து பார்த்திருப்போம். ஆனால் இந்த ஒரு பட்டை ஊறிய தேங்காய் எண்ணெய் தொடர்ந்து தடவி வாருங்கள், ஒரே மாதத்தில் நீங்களே ஆச்சரியப்பட்டு போகும் அளவிற்கு உங்கள் முடியில் மாற்றம் இருக்கும்.

Exit mobile version