Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அனைத்து நோய்க்கு bye bye சொல்லும் முடக்கத்தான்! எப்படி சாப்பிடனும் பாருங்க!

கிராமப்புறங்களில் வீட்டின் முன் இந்த முடக்கத்தான் கீரைச் செடிகள் படர்ந்து இருக்கும். ஆனால் அந்த செடியின் பயன்களை பற்றி நாம் அறியாமல் இருப்போம். ஆனால் முடக்கத்தான் கீரையில் அதிக அளவு நார்ச்சத்து, கால்சியம், புரதம், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளது.

1. முடக்கத்தான் கீரையுடன் வெல்லம் சேர்த்து நெய்யில் வதக்கி சாப்பிட்டால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.

2. முடக்கத்தான் கீரையின் சாற்றைக் காதில் விட்டால் காது வலி அகலும்.

3. கட்டிகளில் வைத்து கட்டினால் அவை உடைந்து புண் ஆறும்.

4. முடக்கத்தான் கீரையை வாய்வு பிரச்சனையால் அவதிபடுபவர்கள் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

5. மாதவிடாய் நிற்கும் நிலையில் உள்ள பெண்களுக்கு இந்தக் கீரை மிகவும் நல்லது. ஒரு மேஜைக்கரண்டி முடக்கத்தான் கீரை சாறு பெண்களின் மாதவிடாய் தொடர்பான பிரச்சனைகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும்.

6. இந்தக் கீரையை அரைத்து கர்ப்பிணிப் பெண்களின் அடிவயிற்றில் கட்டினால் சுகப்பிரசவமாகும்.

7. முடக்கத்தான் கீரையானது முதுகு எலும்பு தேய்மானம், பெண்களுக்கு ஏற்படக் கூடிய எலும்புத் தேய்மானம், மூட்டுவாதம், மூட்டுவலிகளைக் குணப்படுத்தும். இந்த கீரையை துவையல் போல செய்து சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி கை கால் வலி பறந்து போகும்.

8. முடக்கத்தான் கீரையின் துவையலை உணவில் தொடர்ந்து சேர்த்துக் கொண்டால் மூலநோய், மலச்சிக்கல், பாதவாதம், மூட்டுநோய்கள் குணமாகும்.

இதை ஆரம்பத்தில் சாப்பிடத் தொடங்கும்போது முதல் ஒன்று இரண்டு நாட்களுக்கு ஒரு சிலருக்கு மலம் பேதி போன்று போகும். ஆனால் பயப்படத் தேவையில்லை. தொடர்ந்து சாப்பிடலாம். மூளைக்கு பலம் தரும்.

Exit mobile version