Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஆண்களின் நரம்பு தளர்ச்சி பிரச்சனை நீங்க எளிய இயற்கை வைத்தியம்

ஆண்களின் நரம்பு தளர்ச்சி பிரச்சனை நீங்க எளிய இயற்கை வைத்தியம்

 

சமீப காலமாக ஆண்களுக்கு நரம்பு தளர்ச்சி சம்பந்தமான பிரச்சனைகள் அதிகரித்த வண்ணமே உள்ளது. இதை இயற்கை வைத்தியம் கொண்டு சரி செய்யும் முறையை பார்ப்போம்.

 

தேவையான மூலப்பொருட்கள்:

 

1.ஜாதிக்காய் பொடி 50 கிராம்

2.பூனைக்காலி விதை பொடி 50 கிராம்

3.பால் 150 மி.லி

 

செய்முறை:

 

முதலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை குறிப்பிட்டதை போல சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.

 

அதன் பின்னர் 50 கிராம் ஜாதிக்காய் எடுத்து அதை நன்கு இடித்து பொடியாக்கி எடுத்துக்கொள்ளவும்.

 

மேலும் இந்த பொடியுடன் பூனைக்காலி விதை பொடியையும் சேர்த்துக்கொண்டு நன்றாக கலக்கவும்.

 

இவ்வாறு கலக்கிய இந்த பொருட்களை ஒரு கண்ணாடி புட்டியில் எடுத்துக்கொள்ளவும்.

 

பிறகு ஒரு பாத்திரத்தில் 150 மி.லி பாலை ஊற்றி மிதமாக அதை சூடுபடுத்தி கொள்ளவும்.

 

இதனையடுத்து இந்த பாலுடன் ஏற்கனவே இடித்து வைத்துள்ள அந்த பொடியை ஒரு தேக்கரண்டி சேர்த்துக்கொண்டு நன்கு கலக்கவும்.

 

இதனை தொடர்ந்து தினமும் காலை மற்றும் இரவு உணவிற்கு பின் இரண்டு வேளைகள் குடித்து வந்தால் நரம்பு தளர்ச்சி அறவே இல்லாமல் நீங்கி விடும்.

Exit mobile version