Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கர்ப்பமாவதில் பிரச்சனையா? இதை 3 நாள் மட்டும் சாப்பிடுங்க! அடுத்த மாதமே பலன் உண்டு

Health Tips for Pregnancy Using saliya Seeds

Health Tips for Pregnancy Using saliya Seeds

கர்ப்பமாவதில் பிரச்சனையா? இதை 3 நாள் மட்டும் சாப்பிடுங்க! அடுத்த மாதமே பலன் உண்டு

இன்றைய காலத்தில் இளைஞர்கள் பலர் திருமணமாகி பல வருடங்கள் ஆயினும் குழந்தை இல்லை என பல்வேறு மருத்துவர்களை நாடி செல்கின்றார். அவர்களின் இந்த பிரச்சனைக்கு பெரும்பாலும் காரணமாக இருப்பது வளர்ந்து வரும் நாகரிக உலகில் நாம் உண்ணும் உணவு வகைகளே.அதே போல தற்போது அந்த பிரச்சனையை சரி செய்ய போவதும் வீட்டில் இருக்கும் பொருளே.

அந்த வகையில் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து உங்களுக்கான அற்புதமான மருந்து. இதை நீங்கள் மாதவிடாய் காலங்களில் அந்த மூன்று நாள் மட்டும் சாப்பிடுங்க. அடுத்த மாதமே நீங்கள் கர்ப்பம் ஆவது உறுதி.

தேவையான பொருட்கள்:

சாலியா விதை – நூறு கிராம்

கருப்பட்டி – தேவையான அளவு

நெய் – தேவையான அளவு

நாட்டுக்கோழி முட்டை

செய்முறை:

மேற்குறிப்பிட்ட சாலியா விதைகள் வீட்டில் இல்லையென்றால் நாட்டு மருந்து கடைகளில் கேட்டீர்கள் என்றால் தருவார்கள். இது எள் போலவே இருக்கும். ஆனால் அதன் நிறம் சற்றே மாறியிருக்கும்.

Halim seeds benefits in Tamil | சாலியா விதை நன்மைகள்

இந்த சாலியா விதைகளை 100 கிராம் அளவிற்கு எடுத்துக் கொள்ளுங்கள்.

இதனையடுத்து அடுப்பில் வானலியை வைத்து சாலியா விதைகளையும் சட்டியில் போட்டு மிதமான சூட்டில் அந்த விதைகள் பொரிந்து வரும் அளவிற்கு நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

இவ்வாறு வறுத்த சாலியா விதைகள் சூடு ஆறிய பின்பு அதை ஒரு மிக்ஸி ஜாரில் கொட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.

எந்த அளவிற்கு இதில் சாலியா விதைகள் உள்ளனவோ அந்த அளவிற்கு அதில் கருப்பட்டியை சேர்த்துக் கொள்ளுங்கள்.

இப்பொழுது சிறுசிறு உருண்டைகளாக உருட்டி வைத்ததை ஒரு கண்டெய்னரில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

அவ்வளவுதான் இதை நமக்கு தேவையான நேரத்தில் எப்படி சாப்பிட வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.

அதாவது உங்களுக்கு மாதவிலக்கு ஏற்படும் முதல் நாளிலிருந்து மூன்று நாட்கள் வரை ஒவ்வொரு வேலையும் உணவிற்கு பின் இந்த உருண்டையை சாப்பிட்டு வர வேண்டும்.

அதாவது மூன்று நாட்கள் மூன்று வேலை என மொத்தம் ஒன்பது உருண்டைகளை நீங்கள் சாப்பிட வேண்டும்.

அந்த உருண்டையை சாப்பிட்ட பின் ஒரு நாட்டுக்கோழி முட்டையை பச்சையாக அப்படியே வாயில் ஊற்றி சாப்பிட வேண்டும்.

இவ்வாறு மூன்று நாட்கள் இந்த உருண்டையை சாப்பிட்டு வந்தால் உங்கள் கர்ப்பப்பையில் உள்ள அனைத்து கழிவுகளும் வெளியே வரும். அதன் பின் தம்பதிகள் இணையும் பொழுது அடுத்த மாதமே கர்ப்பம் ஆவது நிச்சயம்.

Exit mobile version