Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சர்க்கரையோடு இதை சேர்த்து சாப்பிடுங்கள்! முழு வயிறு சுத்தமாகிவிடும்! வாயுத் தொந்தரவு இருக்காது!

சர்க்கரையோடு இதை சேர்த்து சாப்பிடுங்கள்! முழு வயிறு சுத்தமாகிவிடும்! வாயுத் தொந்தரவு இருக்காது!

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் தவறான உணவுப் பழக்கங்களால் வயிறு கெட்டு விடும் அபாயம் ஏற்படுகின்றது. செரிக்க முடியாத உணவுகளால் மக்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகின்றனர்.

மலச்சிக்கல் பெரும் சிக்கலாக மாறி விடும் காலம் இது. மலம் வெளியேறாமல் இருந்தால் தொற்று கிருமிகள் ரத்தத்தில் கலந்து அதிகப்படியான உபாதைகளை தந்துவிடும்.

சர்க்கரையோடு இதை சேர்த்து சாப்பிடும்பொழுது உங்கள் முழு வயிறு சுத்தமாகி, வாயு தொந்தரவு இல்லாமல் போய்விடும். அதற்கான வழிமுறைகள் என்னவென்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

1. சர்க்கரை அரை ஸ்பூன்

2. வெந்தயம் அரை ஸ்பூன்

3. விளக்கெண்ணை ஒரு ஸ்பூன்.

செய்முறை:

1. முதலில் ஒரு தாளிக்கும் கரண்டியை எடுத்து கொள்ளுங்கள்.

2. அதில் அரை டீ ஸ்பூன் வெந்தயத்தை போட்டு கொள்ளவும்.

3. அதில் விளக்கெண்ணெய் ஒரு ஸ்பூன் ஊற்றவும்.

4. இப்பொழுது இதை அடுப்பில் வைத்து வெந்தயம் பொரியும் வரை அடுப்பில் வைத்திருக்கவும்.

5. வெந்தயம் பொரிந்தவுடன் எண்ணையை மட்டும் தனியாக ஒரு பௌலில் ஊற்றி கொள்ளவும்.

6. எண்ணெய் ஆறியவுடன் ஒரு ஸ்பூன் அளவுக்கு எண்ணையை எடுத்து அதில் அரை டீஸ்பூன் அளவிற்கு சர்க்கரையை சேர்த்து வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.

7. பெரியவர்களாக இருந்தால் இரண்டு ஸ்பூன் அளவிற்குக் கூட எடுத்துக்கொள்ளலாம். சிறியவர்களாக இருக்கும் பொழுது ஒரு ஸ்பூன், 5 வயது முதல் 10 வயது வரை இருக்கும் குழந்தைகளுக்கு அரை ஸ்பூன் அளவு கொடுக்கலாம்.

இதனை சாப்பிட்டுவிட்டு ஒரு டம்ளர் மிதமான சூட்டில் இருக்கும் தண்ணீரை அருந்த வேண்டும். அப்படி அருந்தும்பொழுது மலக்குடலில் உள்ள மலம் இளகி உங்களது முழு வயிறும் சுத்தமாகி விடும்.

Exit mobile version