உடல்சூடு ஒற்றை தலைவலியை தணிக்கும் இயற்கை குளிர்பானம்! – அரிய தகவல்கள்
கோடை காலத்தில் ஏற்படும் உடல்சூட்டை தனிக்க செயற்கை குளிர்பானங்களை அருந்தினால் உடலுக்கு கேடு விளைவதோடு பல்வேறு பாதிப்புகளும் ஏற்படுகிறது. உடலுக்கு பாதிப்பு ஏற்படாமல்மல் இயற்கை வழியில் தாயரித்த குளிர்பானங்களை அருந்துவதே ஆரோக்கியத்திற்கு நல்லது.
இயற்கை வழியில் குளிப்பானம் தயாரிக்கும் வழிமுறையை பார்ப்போம் வாருங்கள்.
1) வெள்ளரிக்காய் இரண்டினை சிறு துண்டுகளாக நறுக்கி அதில் மாங்காய் மற்றும் இஞ்சியின் சிறுதுண்டுகளை அரைத்து சாறாக எடுத்து அதில், எலுமிச்சை சாறு சிறிது சேர்த்து குளிர்ந்த பானை நீரில் கலந்து குடிக்கலாம்.
2) நன்னாரி, வெட்டிவேர் சம அளவு தண்ணீரில் போட்டு 2 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பின்னர் வடிகட்டி பனைவெல்லம் சேர்த்து குடிக்கலாம்.
3) கற்றாழை உறித்து அதிலுள்ள சோற்றை எடுத்து நீரில் கழுவி மசித்து அதனுடன் தண்ணீர் மற்றும் பனைவெல்லம் கலந்து பருகலாம்.
4) தேன், எலுமிச்சை சாறு ஒவ்வொன்றையும் அரை சிறுகரண்டி சேர்த்து காலை வெறும் வயிற்றில் குடிக்க ஒற்றை தலைவலி நீங்கும்.
5) இரவு சோற்றினில் ஒரு சிறுகரண்டி வெந்தயம் போட்டு தண்ணீரில் ஊற்றி வைத்து மறுநாள் காலை வெறும் வயிற்றில் குடிப்பதன் மூலம் உடல் குளுமை அடையும். வயிற்றில் புண் இருந்தால் குணமடையும்.
6) நன்னாரி, விலாமிச்ச வேர், கருங்காலிப் பட்டை, சந்தனச்சிராய் இவற்றை சம அளவு சேர்த்து இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து பனைவெல்லம், தேன் கலந்து குடிக்கலாம்.
இதுபோன்று இயற்கையான வழியில் குளிர்பானங்களை தயார் செய்து குடிப்பதன் மூலம் உடல்சூடு தணிவதோடு சிறு சிறு நோய்களும் குணமாகும்.