உடல் எடை குறைக்க மற்றும் உடல் எடை அதிகரிக்க தேவைப்படும் தெளிவான டிப்ஸ்..!!

0
283

உடல் எடை குறைக்க மற்றும் உடல் எடை அதிகரிக்க தேவைப்படும் தெளிவான டிப்ஸ்..!!

இன்றைய காலத்தில் தன் உடல் தோற்றத்தின் மீது பலருக்கு அக்கறையே கிடையாது. கட்டுப்பாடு இல்லாத உணவு பழக்கங்களால் உடை எடை அதிகரித்து காற்றடித்த பலூனை போல் மாறி விடுகிறார்கள். சிலர் உடலை பற்றிய கவலை இல்லாமல் சரியான உணவை உண்ணாமல் உடல் மெலிந்து இருக்கின்றனர். இந்த இரண்டிற்குமான தீர்வுகளை ( weight loss tips in tamil ) கீழே காண்போம்.

உடல் எடை குறைக்கும் வழிகள் : Weight Loss Tips in Tamil

  • எண்ணெயில் பொறித்த சிப்ஸ், பஜ்ஜி, போண்டா மற்றும் அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும். இதனால் உடலில் அதிகமான கொழுப்பு சேர்வது தடுக்கப்பட்டு மேலும் எடை கூடாமல் இருக்கும்.
  • இனிப்பு வகை உணவுப் பொருட்களை முற்றிலும் தவிர்த்து, சுகர் ஃபிரீ பிஸ்கட்ஸ் மற்றும் பிரட் போன்றவற்றை உண்ணுங்கள்.
  • வாரத்தில் நான்கு நாட்கள் ஸ்கிப்பிங், வாக்கிங், ஸ்லோ ரன்னிங் போன்ற சிறு சிறு உடற்பயிற்சிகளை மேற்கொண்டால் உடல் எடை நிச்சயமாக குறையத் தொடங்கும்.
  • பீப், சிக்கன், மட்டனை ஒதுக்கிவிட்டு சைவ உணவுகளான காய்கறிகளை தினமும் விரும்பி உண்ணுங்கள். சைவ உணவு முறை தொடர்ந்தால் உடல் பருமன் கொழுப்புகள் கறைந்து நல்ல தோற்றம் கிடைக்கும்.
  • சாப்பிடும் நேரத்தில் டிவி அல்லது மொபைல் போனை பார்க்க வேண்டாம். தேவையான அளவு உண்பதில் கவனத்தோடு இருங்கள்.
  • இருக்கிறதே என்று சாப்பிட வேண்டாம் பசிக்கும் வரை காத்திருந்து சாப்பிடுங்கள். மேலும், சுடு நீரில் தேன் கலந்து குடிந்து வந்தால் கெட்ட கொழுப்பு கறைந்து உடல் எடை குறைந்துவிடும்.

உடல் எடை அதிகரிக்கும் வழிகள் : Weight Gain Tips in Tamil

  • நேந்திரம் வாழைப்பழத்தை துண்டாக நறுக்கி சிறிது நேரம் தேனில் ஊறவைத்து உண்டு வந்தால் உடல் எடை கூடும். பச்சை வாழை மற்றும் செவ்வாழை தினமும் சாப்பிடுவதால் மாற்றம் உண்டு.
  • முந்திரி, உலர் திராட்சை, பாதாம், பேரிட்சை, எள்ளு போன்ற சத்துள்ள உணவுகளை தினசரி சீராக எடுத்துக் கொள்வதால் சதை பிடிப்பு அதிகமாகும். எண்ணெயில் வறுத்த உணவுகளை அளவாக எடுத்துக் கொள்ளவும்.
  • மீன், முட்டை மற்றும் கடல் உணவுகள் உடல் பலத்திற்கு வலிமை சேர்க்கிறது. பசும்பால், சீஸ் போன்ற சைவ உணவுகளையும் பட்டியலில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
  • உருளை கிழங்கு, சேனை கிழங்கு அளவாக எடுத்துக் கொள்ளுங்கள் (அதிகம் சாப்பிட்டால் மூட்டு வலி வரலாம்) தேங்காய் பால் உடல் எடையை வேகமாக அதிகரிக்க கூடியது.
  • மதிய உணவுக்கு பிறகு தினமும் குட்டி தூக்கம் போடுங்கள். எப்போதும் சாப்பாட்டிற்கு பிறகு (அளவான) இனிப்பு உண்பதை வழக்கமாக வையுங்கள் உங்களின் உடல் எடை கூடுவது உறுதி.

குறிப்பு : உடல் எடை குறைப்பது, அதிகரிப்பு எதுவாக இருந்தாலும் தினசரி 7 – 8 மணி நேர தூக்கம் அவசியம். 3 லிட்டர் தண்ணீராவது தினமும் பருகுங்கள் உடலுக்கு நல்லது.