நெஞ்சு சளி ஒரே நாளில் கரைய வேண்டுமா:? இதைக் குடித்தாலே போதும்!
தொடர் மழையின் காரணமாக பலரும் நெஞ்சு சளியால் பெரிதும் அவதிப்படுகின்றனர்.
இதற்காக பலர் மாத்திரை மருந்துகள் எடுத்தும் விரைவில் பலன் கிட்டுவதில்லை.இதோ இந்த 3 பொருளை பயன்படுத்தி நெஞ்சு சளியை ஒரே நாளில் கரைத்து விடலாம்.
தேவையான பொருட்கள்:
வெற்றிலை – 5 இலைகள்
மிளகு – 5 மிளகு
சீரகம் -அரை டீஸ்பூன்
செய்முறை
ஐந்து வெற்றிலை,ஐந்து மிளகு மற்றும் அரை டீஸ்பூன் சீரகத்தை எடுத்து நன்றாக இடித்துக் கொள்ள வேண்டும்.
இதன் பிறகு ஒரு டம்ளர் தண்ணீரில் இடித்து வைத்த இந்த மூன்று பொருட்களையும் கலந்து இதன் சாறு இறங்கும் வரை சிறிது நேரம் கொதிக்க விடவும்.இதன் பிறகு இதனை குடிக்கும் சூட்டிற்கு வரும் வரை ஆற விடவும்.
பின்னர் இந்த கசாயம் குடிக்கும் சூட்டிற்கு வந்தவுடன் காலை மாலை என இரண்டு வேளைகளிலும் உணவு சாப்பிட்டதற்கு பிறகு இதனை குடிக்க வேண்டும்.
இதனை ஒரு நாள் குடித்தாலே நெஞ்சு சளி கரையே தொடங்குவது உங்களால் உணர முடியும்.இந்த கசாயத்தை மூன்று நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால் உங்கள் நெஞ்சு சளி முழுமையாக கரைந்து வெளியேறிவிடும்.
மேலும் வறட்டு இருமல் தொண்டை கரகரப்பு உள்ளிட்ட பிரச்சனைக்கும் இது நல்ல தீர்வாக அமையும்.