சுடுநீரை குடிப்பவரா நீங்கள்:? இதனால் ஏற்படும் பக்க விளைவுகளைப் பற்றி அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!!

0
216

சுடுநீரை குடிப்பவரா நீங்கள்:? இதனால் ஏற்படும் பக்க விளைவுகளைப் பற்றி அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!!

இன்றுள்ள பலரும் செரிமானத்திற்கு உதவுமென்று உணவு உண்ட பிறகு சூடான நீரை குடிப்பதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.சுடு நீர் குடித்தால் உணவு எளிதில் செரிமானமாகும் என்பது உண்மையே! ஆனால் மிகச்சூடாக உணவு உட்கொள்வதோ அல்லது நீரை குடிப்பதோ இயற்கைக்கு மாறான ஓர் செயலாகும்.

அதாவது பரிணாம வளர்ச்சியின் படி நாம் ஒரு உணவினை சமைத்து மென்மையாக்கி அதனை வாயினால் மென்று கூல் போன்ற பொருளாக்கி உமிழ் நீரோடு சேர்த்து நாம்
விழுங்குகின்றோம்.இந்த உணவானது நமது இரைப்பைக்குள் சென்றவுடன் ஹைட்ரோக்ளோரிக் அமிலம் சுரக்கப்பட்டு உணவினை செரிக்க செய்கின்றது.

இவ்வாறு நம் உடலில் செரிமானம் என்ற செயல் நடக்கும் பொழுது இயற்கையாகவே வெப்பம் உருவாகி உணவினை எரிக்கின்றது.(அதாவது செரிக்கின்றது) ஆனால் நாம் சாப்பிட்டவுடன் சுடு நீர் குடிப்பது இந்த வெப்பத்தினை மென்மேலும் அதிகரிக்கும்.இந்த அதிகப்படியான வெப்பமானது நொதிகளின் வேலையை குறைக்க ஆரம்பிக்கும்.இதனால் உடலில் பல்வேறு சுரப்பிகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

அப்போ சாப்பிட்டவுடன் சுடுநீர் குடிக்கவே கூடாதா என்றால் குடிக்கலாம்.அதாவது சுடு நீரை நன்றாக கொதிக்க வைத்து அதனை ஆறவைத்து வடிகட்டி குடிக்கலாம்.இல்லையென்றால் மிக வெதுவெதுப்பான சுடு நீரை குடிக்கலாம். சாப்பிட்டவுடன் மிகச் சூடாக குடிக்கும் பழக்கத்தை வழக்கப் படுத்தாமல்,இறைச்சி போன்ற கடுமையான உணவினை உட்கொள்ளும் போது சிறிதளவு பயன்படுத்தலாம்.முடிந்தவரை மிகச்சூடாக உணவினை உட்கொள்வதோ அல்லது நீரினை குடிப்பதைதோ தடுப்பது மிக அவசியமான ஒன்றாகும்.