Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஆலம் விழுது போல் உங்கள் முடி வளர வேண்டுமா? தேங்காய் எண்ணெயுடன் இதை சேருங்கள்!!

ஆலம் விழுது போல் உங்கள் முடி வளர வேண்டுமா? தேங்காய் எண்ணெயுடன் இதை சேருங்கள்!!

நீளமான அடர்த்தியான கருமை முடி என்பது அனைத்து பெண்களின் கனவாகும்.
ஆனால் இந்த கனவு பல பெண்களுக்கு தற்போதைய காலகட்டத்தில் நனவாவதில்லை.
காரணம் பற்பல கெமிக்கல் நிறைந்த ஷாம்புகளையும்,ஹேர் ஆயிலையும் தேய்ப்பதனளையே உங்கள் தலைமுடி வேரிலிருந்து வலுவிழந்து கொட்ட தொடங்கி விடுகிறது.

இனி அந்த கவலை வேண்டாம் ஆலமர விழுதைப் போல உங்கள் முடி அடர்த்தியாக வலிமையாக வளர உங்கள் தேங்காய் எண்ணெயுடன் இதனை கலந்து தேய்த்தாலே போதும்.

தேங்காய் எண்ணெயில் செம்பருத்தி பூ மற்றும் ஆலமரத்தின் இளம் விழுதை போட்டு தேய்த்தாலே போதும்.உங்கள் முடி நீண்டு கருமையாக வலிமையாக வளர.இதனை எப்படி முறையாக செய்வது என்பதனை பார்ப்போம்.

செம்பருத்தி பூவை( ஒத்த செம்பருத்தி எனப்படும் நாட்டு செம்பருத்தி) எடுத்து நிழலில் நன்றாக உலர்த்தி பொடி செய்து கொள்ள வேண்டும்.

இளம் ஆழம் விழுதையும் எடுத்து சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி அதனையும் காய வைத்து நன்றாக பொடி செய்து கொள்ள வேண்டும்.

இந்த இரண்டு பொடியையும் சம அளவில் கலந்து ஒரு வெள்ள துணியில் இருக்க கட்டி நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் தேங்காய் எண்ணெய் பாட்டிலில் போட்டு விட வேண்டும்.

இதனை தினமும் காலையில் தேய்த்து வர உங்கள் முடி ஒரே மாதத்தில் நீண்டு கருமையாக வளர்வதை கண்கூட காணலாம்.

குறிப்பு:

இதற்கு பயன்படுத்தும் தேங்காய் எண்ணெய் செக்கிலாட்டிய சுத்தமான எண்ணெயாக இருக்க வேண்டும்.

Exit mobile version