பாயில் தூங்கினால் உடலின் இந்தப் பிரச்சனைக்கெல்லாம் தீர்வா??

Photo of author

By Pavithra

பாயில் தூங்கினால் உடலின் இந்தப் பிரச்சனைக்கெல்லாம் தீர்வா??

நாம் நினைத்துக்கூட பார்க்காத அளவிற்கு அறிவியலும் தொழில்நுட்பமும் வளர்ந்து விட்டது.அதேபோன்று மனிதனுக்கு ஏற்படும் நோய்களும் வளர்ந்துவிட்டன.

தற்போதைய காலகட்டத்தில் டெக்னாலஜி மாற்றத்தின் காரணமாக நாம் பல ஆரோக்கியமான பாரம்பரிய பழக்க வழக்கங்களை மறந்தே விட்டோம்.அதில் ஒன்றுதான் தரையில் பாய் விரித்து தூங்குவது.

தரையில் பாய் விரித்து தூங்கினால் நம் உடலுக்கு நினைத்துக்கூட பார்க்காத அளவிற்கு ஏராளமான நன்மைகள் இருக்கின்றது. அதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பொதுவாக பாயில் கோரைப்பாய்,மூங்கில் பாய், ஈச்சம்பாய் என பல வகைகள் உள்ளன.ஒவ்வொரு பாயும் ஒவ்வொரு மருத்துவ குணம் உடையது.

பாயில்பாயில் படுத்து உறங்குவதால் ஏற்படும் நன்மைகள்!

கர்ப்பிணி பெண்கள் பாயில் தூங்குவதால் அவர்களுக்கு ஏற்படும் முதுகு வலி இடுப்பு வலி வராது.மேலும் பாயில் படுத்து உறங்குவதால் இடுப்பு எலும்புகள் விரிவாக்கம் கொடுத்து சுகப்பிரசவத்திற்கு பெரிதும் வழிவகுக்கும்.

பாய் உடல் சூட்டை முற்றிலுமாக உள்வாங்க கூடியது.இதனால் இரவில் பாயில் படுத்து உறங்குவதால் ஆழ்ந்த தூக்கம் வரும்.மேலும் உடல் சோர்வு ஜுரம் மற்றும் மந்தம் போன்ற பல பிரச்சனைகளை தீர்க்கக் கூடியது.

பிறந்த குழந்தைகளை பாயில் வைப்பது குழந்தைகளின் முதுகெலும்பை சீர்படுத்தும். மேலும் கழுத்தில் உரை விழாது.

முதியோர்களுக்கு பெரும்பாலும் ரத்த ஓட்டம் சீராக இருக்காது.இவர்கள் பாயில் படுத்து உறங்கினால் ரத்த ஓட்டம் சீர்படும்.மேலும் உடல் வலியிலிருந்து விடுபடலாம்.

கல்வி கற்கும் மாணவ மாணவிகளுக்கு புத்தகப்பை தூக்குவதனால் ஏற்படும் இளம்வயதில் முதுகு கூன் விழுவதை தடுக்கும்.

கட்டிலில் உறங்கும்போது பாயை விரித்து உறங்கினால் ஓரளவிற்கு நன்மை பயக்கும்.

ஆடம்பரம் மோகத்தினால் இதுபோன்ற பல பாரம்பரியப் பழக்கங்களை நாம் மறந்துவிட்ட அதனால் உடலில் நாம் நினைத்துக்கூட பார்க்காத அளவிற்கு பிரச்சனைகள் உண்டாகின்றன.இது போன்று சில பாரம்பரிய விஷயங்களை நாம் மேற்கொள்வதால் உடலில் பல பிரச்சனைகளில் இருந்து விடுபெறலாம்.நம் ஆரோக்கியம் நம் கையில்!

Exit mobile version