குழந்தைகளின் நெஞ்சு சளி ஒரே இரவில் கரைய வேண்டுமா? இதனை மட்டும் செய்தாலே போதும்!

0
963
the-only-solution-to-eye-problems-use-this-fruit

குழந்தைகளின் நெஞ்சு சளி ஒரே இரவில் கரைய வேண்டுமா? இதனை மட்டும் செய்தாலே போதும்!

குழந்தைகளின் நெஞ்சு சளியை கரைய வைக்க தாய்மார்கள் பெரிதும் பாடுபடுவர்.இனி கவலை வேண்டாம்.மூன்றே நாட்கள் இதனை செய்தாலே போதும் குழந்தைகளின் நெஞ்சு சளி முற்றிலும் கரைந்து விடும்.

தேவையான பொருட்கள்

வெற்றிலை,

பச்சைக் கற்பூரம்,

தேங்காய் எண்ணெய்,

நல்லெண்ணெய்.

செய்முறை:

முதலில் பச்சை கற்பூரத்தை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து சூடு படுத்திக் கொள்ளவும்.இந்த எண்ணெய் வெதுவெதுப்பான சூட்டிற்கு வந்த பிறகு வெற்றிலையில் தடவிக் கொள்ள வேண்டும்.இந்த எண்ணெய் தடவிய வெற்றிலையை நல்லெண்ணெய் ஊற்றிய விளக்கில் கை பொறுக்கும் அளவிற்கு சூடு வரும் வரை வாட்டி எடுக்கவும்.

அதாவது குழந்தைகளின் நெஞ்சில் வைத்தால் தோல் வெந்து போகாத அளவிற்கு சூடு இருக்க வேண்டும்.இவ்வாறு சூடு செய்த வெற்றிலையை எடுத்து குழந்தைகளின் நெஞ்சில் போட வேண்டும்.போட்ட வெற்றிலையின் சாறு நன்றாக இறங்கும் வரை அதனை எடுக்காமல் இருக்க வேண்டும்.

இவ்வாறு இரவில் மட்டும் மூன்று நாட்கள் செய்து வருகையில் குழந்தைகளின் நெஞ்சு சளி உடனடியாக கரைத்து வெளியேற்றிவிடும்.இதனை மூன்று மாதத்திற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் பின்பற்றலாம்.

இதனை பயன்படுத்திய ஒரே இரவிலேயே சளி கரைந்து மூக்கு மற்றும் மலம் வளியே வருவதை காணலாம்.மேலும் குழந்தைகளின் இரும்பல் பிரச்சனைக்கும் இது நல்ல மருந்தாக இருக்கும்.