Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஐந்தாவது மாத்தில் அடியெடுத்து வைக்கும் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய ஆரோக்கிய உணவுகள்!!

குழந்தை பருவத்தில் உட்கொள்ளும் உணவை பொறுத்து தான் ஆரோக்கிய பலன்கள் கிடைக்கும்.தாய்ப்பால் மட்டும் குழந்தையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தது.தாய்ப்பாலுடன் சில உணவுகளை கொடுத்தால் மட்டுமே குழந்தையின் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியம் மேம்படும்.

பிறந்த குழந்தைக்கு 4 முதல் 5 மாதம் வரை தாய்ப்பால் கொடுக்க வேண்டியது மிகவும் முக்கியமாகும்.சில தாய்மார்கள் தாய்ப்பால் கொடுக்காமல் மாட்டு பால்,எருமை பால் போன்றவற்றை குழந்தைக்கு கொடுக்கின்றனர்.இன்னும் சிலர் பால் பவுடரில் பால் தயாரித்து குழந்தைக்கு கொடுக்கின்றனர்.தாய்ப்பாலுக்கு இணைய சத்துக்கள் வேறு எதிலும் கிடையாது.ஆகவே குறைந்தது 5 மாதங்களாவது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.

பின்னர் தாய்ப்பாலை குறைத்துவிட்டு ஆரோக்கியம் நிறைந்த உணவுகளை சாப்பிட பழக்க வேண்டும்.அப்படி ஐந்தாவது மாதத்தில் அடி எடுத்து வைக்கும் குழந்தைக்கு என்ன மாதிரியான உணவு கொடுக்க வேண்டும் என்பதை தாய்மார்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.

குழந்தைக்கு கொடுக்க கூடிய உணவு ஊட்டச்சத்து நிறைந்தவையாக இருந்தால் தான் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

ஐந்து மாத குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவுகள்:

1)பருப்பு வேகவைத்து குழைத்து சாப்பிட கொடுக்கலாம்.கேரட்,பீட்ரூட் போன்ற காய்களை வேகவைத்து மசித்து கொடுக்கலாம்.

2)பழங்களை அரைத்து சாறு எடுத்து சர்க்கரை போன்ற இனிப்பு சேர்க்காமல் கொடுக்கலாம்.

3)ராகி மாவில் கஞ்சி செய்து கொடுக்கலாம்.தாய்ப்பால் மட்டும் குடித்து வரும் குழந்தைகளுக்கு பசும் பால் கொடுத்து பழக்கலாம்.

4)குழந்தைக்கு 6 மாதம் நிறைவடைந்த பிறகு அவித்த இட்லி கொடுக்கலாம்.பழங்களை வேகவைத்து மசித்து சாப்பிடக் கொடுக்கலாம்.

5)பழக்கூழ்,பருப்பு சாதம் போன்றவற்றை செய்து கொடுக்கலாம்.உணவில் சிறிது பட்டர் அல்லது நெய் சேர்த்து கொடுத்தால் குழந்தையின் உடலில் கொழுப்புச்சத்து அதிகரிக்கும்.

6)வேகவைத்த கருப்பு சுண்டலை மசித்து கொடுக்கலாம்.உளுந்து பருப்பில் கஞ்சி செய்து கொடுக்கலாம்.சுண்டல்,வேர்கடலை,கருப்பு உளுந்து போன்றவற்றை பவுடராக்கி கஞ்சி செய்து கொடுத்தால் குழந்தையின் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

7)புளிப்பு இல்லாத தயிர் கொடுத்தால் குழந்தையின் உடலில் கால்சியம் சத்து அதிகரிக்கும்.

8)புழுங்கல் அரிசியை வறுத்து பொடித்து கஞ்சி செய்து ஊட்டிவிடலாம்.இந்த புழுங்கல் அரிசி கஞ்சியில் உலர் பருப்பு பொடி சேர்த்து கொடுக்கலாம்.

Exit mobile version