ஆழமான ஒரு குரல் கேட்டது!! 7 முறை தற்கொலையிலிருந்து மீண்டு வந்துள்ளேன்!! செல்வராகவன்

0
122
Heard a deep voice!! I have recovered from suicide 7 times!! Selvaraghavan

செல்வராகவும் திரைத்துறையில் தனது பயணத்தை இயக்குனராகவும் நடிகராகவும் பன்முகங்களில் செயல்படுத்தி வருகிறார். இவர் பல சமூக கருத்துக்களையும், தன்னுடைய வாழ்வில் நடந்த சம்பவங்களிலிருந்து தான் கற்றுக் கொண்டதையும் வெளிப்படையாக கூறியுள்ளார்.

இயக்குனர் செல்வராகவன் தனக்கு வந்த தற்கொலை எண்ணங்களை பற்றியும் அதிலிருந்து தான் வெளிவந்த விதத்தை குறித்தும் கூறியதாவது :-

உலகில் உள்ள அனைவரும் இப்படி ஒரு நிலையை கடக்காமல் வந்திருக்க முடியாது. மன அழுத்தம் ஒருவருக்கு ஏற்பட்டு விட்டால் அதன் உச்சகட்டமாக அவர் எடுக்கும் முடிவு தற்கொலையாகத்தான் இருக்கிறது. எனக்கும் அப்படித்தான் இருந்தது.

நான் இதுவரையில் ஏழு முறை தற்கொலை முயற்சி மேற்கொண்டுள்ளேன். ஆனால் தற்பொழுது இது போன்ற எண்ணங்கள் எனக்கு துளி அளவு கிடையாது. ஒவ்வொரு முறை நான் தற்கொலைக்கு முயற்சிக்கும் பொழுதும் ஒரு ஆழமான சத்தம் பொறுமையாக இரு! பொறுமையாக இரு! என்று கேட்கும். நானோ ஏதோ ஒரு சத்தம் கேட்கிறது என்று அதை அப்படியே விட்டு விடுவேன்.

உண்மையில் நமக்கு மன அழுத்தம் ஏற்பட்டு விட்டால் அதை நம்முடன் உள்ளவர்களிடம் தைரியமாக கூறி விடுங்கள். எந்த சண்டையாக இருந்தாலும் அதை ஒரு வாரம் கழித்து பேசி தீர்த்துக் கொள்ளுங்கள். தீர்வு இல்லாத பிரச்சனை என்பது எதுவுமே கிடையாது. மன அழுத்தத்தின் காரணமாக நான் எடுத்த முடிவுகளை இப்பொழுது நினைக்கும் பொழுது, அப்போது நான் தற்கொலை செய்திருந்தால் இன்று நான் இந்த நிலையில் மகிழ்ச்சியாக இருக்க முடியுமா என்றுதான். எனவே மன அழுத்தத்தில் உள்ள போது எந்த வித முக்கிய முடிவுகளையும் எடுக்காதீர்கள் என்று கூறியுள்ளார்.