Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மாரடைப்பு Vs கார்டியாக் அரெஸ்ட்!! இவற்றின் அறிகுறிகள் மற்றும் உண்மை காரணங்கள்!!

கடந்த சில காலங்களாக இதயம் சம்மந்தப்பட்ட நோய் பாதிப்புகளால் உயிரிழப்பு ஏற்படுவது அதிகரித்து வண்ணம் உள்ளது.சிறியவர்கள்,பெரியவர்கள் அனைவரும் இதய நோய்க்கு ஆளாகி வருகின்றனர்.இதய நோய் பிரச்சனை ஏற்பட பல்வேறு காரணங்கள் இருக்கிறது.

இதில் ஆரோக்கியம் இல்லாத உணவுமுறை பழக்கம் முதலிடத்தில் இருக்கிறது.மோசமான உணவுகள் மாரடைப்பு பாதிப்பிற்கு வழிவகை செய்கிறது.மன அழுத்தம்,தூக்கமின்மை போன்ற காரணங்களால் இதய ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது.

ஹார்ட் அட்டாக் மட்டும் இதய நோய் அல்ல.கார்டியாக் அரெஸ்ட்,இருதய நோய்,சீரற்ற இதயத் துடிப்பு போன்றவைகளும் இதய நோயில்அடங்கும்.இந்த இதய நோய்களால் ஆண்டு தோறும் 17 மில்லியனுக்கு அதிகமானோர் உயிரிழக்கின்றனர் என்று ஆய்வுகள் தெரிவிக்கிறது.இதய நோய்க்கு அடிப்படை காரணம் மன அழுத்தம் மற்றும் சோம்பல் வாழ்க்கை முறையும்தான்.

இதய நோய்களான ஹார்ட் அட்டாக் மற்றும் கார்டியாக் அரெஸ்ட் ஆகிய இரண்டும் ஒன்று என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.இவை இரண்டும் ஒரே மாதிரி அறிகுறிகளை கொண்டிருப்பதால் இவற்றை ஒரே நோய் பாதிப்பு என்று நினைக்கின்றனர்.ஆனால் உண்மையில் இவை இரண்டு வெவேறான பாதிப்புகளாகும்.

இதயத்திற்கு செல்லும் இரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படும் பொழுது மாரடைப்பு பாதிப்பு ஏற்படுகிறது.அதேபோல் இரத்த ஓட்டம் தடைபடுவதால் கார்டியாக் அரெஸ்ட் உருவாகிறது.மாரடைப்பு ஏற்பட்டால் நெஞ்சு பகுதியில் கடுமையான வலி ஏற்படும்.ஆனால் கார்டியாக் அரெஸ்ட் என்பது இதயம் செயலற்று போவதை குறிக்கிறது.கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டால் சில நிமிடங்கள் மூளை மட்டும் இயங்கும்.

மாரடைப்பு வர காரணங்கள்:

1)ஆரோக்கியம் இல்லாத உணவுப்பழக்கம்
2)பிபி அதாவது உயர் இரத்த அழுத்தம்
3)மோசமான குடி மற்றும் புகைப்பழக்கம
4)சோம்பல் வாழ்க்கைமுறை
5)உடல் பருமன்
6)கெட்ட கொலஸ்ட்ரால்

மாரடைப்பு அறிகுறிகள் எப்படி இருக்கும்?

1)நெஞ்சு பகுதியில் வலி
2)இடது முதுகு பகுதியில் கடும் வலி
3)இடது தோள்பட்டை வலி
4)பதற்றம்
5)அதிக வியர்வை
6)மார்பு இறுக்கம்

கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட காரணங்கள்:

1)இதய தமனி அடைப்பு
2)சீரற்ற இதயத் துடிப்பு
3)உயர் இரத்த அழுத்தம்

கார்டியாக் அரெஸ்ட் அறிகுறிகள் எப்படி இருக்கும்?

1)சுவாசிப்பதில் சிரமம்
2)மயக்கம்
3)நெஞ்சு வலி
4)உடல் சோர்வு
5)தலைச் சுற்றல்

மாரடைப்பு மற்றும் கார்டியாக் அரெஸ்ட் போன்ற எந்த பாதிப்புகள் ஏற்பட்டாலும் அவர்களுக்கு உரிய மருத்துவ உதவி செய்ய வேண்டும்.சிறிது தாமதமானாலும் உயிர் போய்விடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Exit mobile version