Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இதய நோய் வராமல் இருக்க இதை செய்தாலே போதும்!! இது தெரியாம பொச்சே!!

பாரம்பரிய ஊஞ்சல்:

தமிழ் பாரம்பரியத்தில் ஊஞ்சல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. மேலும், ஊஞ்சலாடுவது அனைவருக்கும் பிடித்த ஒன்றாகும். சிறுவர்கள், முதியவர்கள் மற்றும் பெண்கள் என அனைத்து வயதினர் உடையவர்களும் விளையாடுவார்கள்.

ஆனால், இன்றைய சூழலில் பெரும்பாலும் சிறுவர்கள் மட்டுமே ஊஞ்சலில் ஆடுகின்றனர். குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்களுக்கு அதிக மகிழ்ச்சியைத் தரக் கூடியது ஊஞ்சல். முன்பு எல்லாம் ஊருக்கு வெளியே ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி பெண்கள் ஆனந்தமாக ஆடினார்கள். பின் படிப்படியாக குறைந்து தற்போது அது முற்றிலுமாக காணாமல் போய்விட்டது.

ஊஞ்சலானது மூன்று வகையாக உள்ளது. கிறுக்கு ஊஞ்சல், ஆடும் ஊஞ்சல், உத்து ஊஞ்சல் ஆகியன ஆகும். மேலும் சிலருக்கு ஊஞ்சல் என்றால் தற்போது என்னவென்று கூட தெரியாத நிலை உள்ளது.

ஊஞ்சல் ஆடுவது கடவுளுக்கு மிக மகிழ்ச்சியை அளிக்கும் என்ற விஷயம் என்பதால்தான், கோவில்களில் இறைவனை ஊஞ்சலில் வைத்து அரைமணிநேரம் ஆட்டுவர்.

மேலும், சாப்பிட்ட பின் ஊஞ்சலில் ஆடினால் நன்கு செரிக்கும் .மேலும் ஊஞ்சல் ஆடுவதால் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் அனைத்தும் மறைந்து நேர்மறை எண்ணங்கள் தோன்றும்.

ஊஞ்சலாடுவதன் காரணமாக ரத்த ஓட்டம் அதிகரித்து இதயத்திற்கு சீராக ரத்தம் சுற்றி பாயும்.

கம்ப்யூட்டரில் மணிக்கணக்கில் உட்கார்ந்து வேலை பார்க்கும் இன்றைய பெண்கள் ஊஞ்சல் பயிற்சியை, தினமும் செய்தால் முதுகு தண்டுவடம் பலம் பெற்று கழுத்து வலி குணமடைய வழி செய்கிறது.

மேலும், இதயத்திற்கு சுத்தமான பிராண வாயுவை கொடுத்து இதயத்தை சீராக இயங்கச் செய்யும். தோட்டத்தில் ஊஞ்சல் ஆடுபவர்கள் அனைவரது மனச்சோர்வு நீங்கி உடல் உற்சாகம் பெறும். மேலும், கோபமாக இருக்கும் போது ஊஞ்சல் ஆடினால் கோபம் தணியும்.

நேராக அமர்ந்து கைகளை உயர்த்தி இரு பக்க கம்பிகளையும் பிடித்துக் கொண்டு வேகமாக ஆடும் போது முதுகு தண்டுக்கு ரத்த ஓட்டம் பாய்ந்து மூளை சுறு சுறுப்பாக வேலை செய்யும். இதன் காரணமாகவே தான் ஊஞ்சல் ஆடுவது மிகவும் பாரம்பரியமான ஒன்று என்று கூறுவர்.

Exit mobile version