Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வரும் நாட்களில் தமிழகத்தில் வெப்ப அலை உச்சம் அடையும்!! தனியார் வானிலை ஆய்வாளர் தகவல்!! 

How to protect your body from the scorching sun?

How to protect your body from the scorching sun?

வரும் நாட்களில் தமிழகத்தில் வெப்ப அலை உச்சம் அடையும்!! தனியார் வானிலை ஆய்வாளர் தகவல்!!
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருக்கும் நிலையில் வரும் நாட்களில் வெப்ப அலை உச்சம் அடையும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் ஒருவர் அறிவித்துள்ளார்.
தமிழ் நாட்டில் ஏப்ரல் மாதம் தொடங்கியது முதலே வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கின்றது. வழக்கமாக மே மாதம் அக்னி நட்சத்திரம் தொடங்கிய பின்னர் தான் வெப்பநிலை அதிகமாக இருக்கும். ஆனால் தற்பொழுது ஏப்ரல் மாதத்திலேயே வெயிலின் தாக்கம் அக்னி நட்சத்திரம் தொடங்கியதை போல அதிகமாக இருக்கின்றது.
தமிழகத்தில் ஈரோடு, சேலம், மதுரை, கரூர் ஆகிய மாவட்டங்களில் தற்பொழுது வெயிலின் தாக்கம் தீயின் மேல் நிற்பது போல இருக்கின்றது. நாளுக்கு நாள் அதிகரிக்கும் இந்த வெயிலின் தாக்கத்தினால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வரும் நிலையில் வரும் நாட்களில் இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 42 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி இருக்கின்றது. அதே போல கரூர், வேலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் 40 டிகிரியை தாண்டி வெப்பநிலை பதிவாகி இருக்கின்றது.
தமிழகத்தில் நிலவி வரும் அதிகப்படியான வெப்பநிலை காரணமாக வெப்ப அலை வீசி வருகின்றது. இந்நிலையில் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் அவர்கள் வரும் நாட்களில் இயல்பை விட 2 டிகிரி முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்று எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
எக்ஸ் பக்கத்தில் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்  அவர்கள் “தமிழகத்தில் வெப்ப அலை வரும் நாட்களில் உச்சம் அடையும். வரும் மே 1ம் தேதி முதல் 4ம் தேதி வரை தமிழகத்தில் வெப்ப அலை அதிகமாக வீசக்கூடும். குறிப்பாக இராணிப்பேட்டை, நாமக்கல், வேலூர், திருவள்ளூர், ஈரோடு, காஞ்சிபுரம், சேலம், திருச்சி, கரூர் ஆகிய மாவட்டங்களில் வெப்பநிலை அதிகப்படியாக இருக்கும்.
ஆனால் உங்களுக்கு ஒரு நற்செய்தியை இங்கு தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தை குறைக்க மே 4ம் தேதிக்கு மேல் உள் மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருக்கின்றது.
கடந்த 2003ம் ஆண்டு மே 29ம் தேதி திருத்தணியில் 48.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவான நிலையில் அதே 2003ம் வருடம் மே 31ம் தேதி சென்னையில் 45 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. கடந்த 230 வருடங்களில் அதிகபட்சமாக பதிவான வெப்பநிலை திருத்தணியில் பதிவான வெப்பநிலையே ஆகும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
Exit mobile version