கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் பெய்த கனமழையின் காரணமாக, சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்கிறது இதன் காரணமாக, போக்குவரத்து நெரிசல் உண்டாகியிருக்கிறது.
கோரமங்களா போன்ற பெங்களூருவின் பல இடங்களில் நேற்றிரவு முதல் இடைவிடாமல் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, தாழ்வான பகுதிகளிலும், சாலைகளிலும் வெள்ள நீர் தேங்கி காணப்படுகிறது. ஆகவே மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருப்பதுடன் போக்குவரத்து நெரிசலும் உண்டாகியிருக்கிறது.
இதுகுறித்து பொதுமக்கள் ஒரு சிலர் தெரிவிக்கும் போது காலையில் எழுந்து தான் சாலைகளில் தண்ணீர் தேங்கி இருப்பதை கவனித்தோம். ஆனால் பல அடி உயரத்திற்கு நீர் தேங்கி இருக்கிறது. பல கட்டிடங்கள், கீழ் தளங்கள், தண்ணீரில் மூழ்கி கிடக்கின்றன
பாதாள சாக்கடை அமைப்பு மோசமாக இருப்பதால் ஒவ்வொரு வருடமும் இது போன்ற சூழ்நிலை ஏற்படுகிறது. இதற்கு ஒரு நிரந்தர தீர்வு இதுவரையில் காணப்படவில்லை. சாலையமைக்கும் போது பாதாள சாக்கடை திட்டம் சரிவர பராமரிக்கப்படவில்லை என்று அவர்கள் ஆதங்கம் தெரிவித்திருக்கிறார்கள்.