தமிழகத்தில் உள்ள 21 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கு எச்சரிக்கை!!

0
65
#image_title

தமிழகத்தில் உள்ள 21 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கு எச்சரிக்கை!!

தமிழகத்தில் சென்னை மற்றும் திருவள்ளூர் போன்ற பல மாவட்டங்களில் கனமழைப்பெய்ய வாய்ப்புள்ளதாக இன்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் கோடைக்காலம் முடிந்து பருவமழைக் காலம் தொடங்கி விட்டது. இந்த பருவமழையானது,ஒரு சில இடங்களில் அதிகமாகவும்,மற்ற இடங்களில் குறைவாகவும் பெய்து வருகிறது. இந்த நிலையில் பருவமழை காரணமாக ஒரு சில மக்களின் அன்றாட வாழ்வும் பாதிக்கும் சூழல் உருவாகிவிட்டது.

இதனிடையே சென்னை, மற்றும் அதனை ஒட்டிய ஒரு சில பகுதிகளில் தற்போது மழையானது சற்று அதிகமாகவே பெய்து வருகிறது. இன்று ராணிப்பேட்டை,மற்றும் வேலூர் ,போன்ற பகுதிகளில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேற்கு திசையில் ,காற்றின் வேகம் சற்று அதிகளவு காணப்படுவதால் தமிழ்நாடு,மற்றும் அதை சுற்றியுள்ள புதுச்சேரி,காரைக்கால் போன்ற பகுதிகளில் அக்டோபர் 1 ஆம் தேதி வரை இடி மின்னலுடம் கூடிய கனமழைப்பெய்யும் எனத் தெரிவித்துள்ளனர்.

அவ்வாறே இன்று சென்னை மற்றும் திருவள்ளூர் போன்ற பகுதிகளில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழை பெய்யக்கூடும் என்றும், அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருச்சிராப்பள்ளி, கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், பெரம்பலூர், அரியலூர் ஆகிய 21 மாவட்டங்களிலும் லேசான மற்றும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளனர்.