Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கனமழை வெளுத்து வாங்கும் இடம்! இந்தந்த ஊரில் தான்!

Heavy rain bleaching place! It's in this town!

Heavy rain bleaching place! It's in this town!

கனமழை வெளுத்து வாங்கும் இடம்! இந்தந்த ஊரில் தான்!

கடந்த ஒரு வரமாக தமிழகதில்  ஒருசில இடங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்ந்து வருகின்றது இன்றைய சென்னை வானிலை அறிக்கையில் கூறப்பட்டது.அதனை அடுத்து தமிழ்நாட்டில் இன்று 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்நாட்டில் வளிமண்டல கிழடுக்கு சுழற்சியால் 16 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர்,வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, மற்றும் காரைக்கால் பகுதியில் ஒரு சில  இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும்

சென்னையை பொறுத்த வரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி-மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Exit mobile version