கனமழை எதிரொலி..!! நாளை பள்ளிகளுக்கு விடுமுறை.. சர்க்குலர் வந்தாச்சு!!

0
128
#image_title

கனமழை எதிரொலி..!! நாளை பள்ளிகளுக்கு விடுமுறை.. சர்க்குலர் வந்தாச்சு!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து இருக்கும் நிலையில் கேரள கடலோர பகுதியில் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்கத்தில் பெரும்பாலான மாவட்டங்களை கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

கடந்த 15 நாட்களுக்கும் மேலாக பெய்து வரும் பருவமழை தற்பொழுது தீவிரமடைந்து இருக்கும் நிலையில் தமிழகத்தில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

ஏற்கனவே சென்னை, விழுப்புரம், கடலூர், நாகை, மயிலாடுதுறை, நெல்லை, தூத்துக்குடி, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை ஒரு காட்டு காட்டி வரும் நிலையில் அந்த லிஸ்டில் காஞ்சிபுரம், செங்கல்பட்டும் உள்ளிட்ட மாவட்டங்களும் இணைந்து இருக்கிறது.

விடாது பெய்து வரும் கனமழையால் சில மாவட்டங்களுக்கு கடந்த சில தினங்களாக விடுமுறை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு நாளை இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

இந்நிலையில் கனமழை எதிரொலியால் நாளை செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்து இருக்கிறார். எனவே நாளை செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை ஆகும்.