Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கனமழை எதிரொலி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை? எந்தந்த மாவட்டங்களுக்கு தெரியுமா! 

Heavy rain echoes two days off for schools and colleges? Do you know which districts!

Heavy rain echoes two days off for schools and colleges? Do you know which districts!

கனமழை எதிரொலி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை? எந்தந்த மாவட்டங்களுக்கு தெரியுமா!

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கி உள்ளது. கடந்த 5 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது.மேலும் நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.அதனை தொடர்ந்து ஆழ்ந்த காற்றழுத்தம் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக மாறியது இவை இன்று மாலை புயலாக மாறக்கூடும். இந்த புயலுக்கு மாண்டஸ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த புயலின் காரணமாக நாளை மற்றும் 9 ஆம் தேதிகளில் தமிழகத்தில் சென்னை ,திருவள்ளூர் ,கடலூர் ,விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு பேரிடர் மீட்பு  குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் புதுச்சேரி ஸ்ரீஹரிகோட்டா இடையே இன்று மாலை மாண்டஸ் புயல் கரையை கடப்பதினால் நாளை முதல் வரும் 10 ஆம் தேதி வரை தமிழகம் ,புதுச்சேரி ,காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் சென்னை ,காஞ்சிபுரம் ,செங்கல்பட்டு ,திருவள்ளூர் ,கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக கனமழை காரணமாக ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதனால் அந்த மாவட்டங்களில் நாளை மற்றும் 9 ஆம் ஆகிய இரண்டு தேதிகளுக்கு  பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை அந்ததந்த மாவட்ட ஆட்சியர் வெளியிடுவார்கள் என்று தெரிவித்துள்ளனர்.

Exit mobile version