அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களுக்கு பலத்த மழை உண்டு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!!

0
113
#image_title

அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களுக்கு பலத்த மழை உண்டு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை விடாமல் வெளுத்து வாங்கி வரும் அதே நேரத்தில் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி சில தினங்களில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

இதன் காரணமாக தமிழகத்தின் சென்னை, விழுப்புரம், கடலூர், நாகை, மயிலாடுதுறை, நெல்லை, தூத்துக்குடி, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையானது வருகின்ற 27 ஆம் தேதி வரை நீடிக்கும் என்று தெரிவித்து இருக்கிறது.

ஏற்கனவே வடகிழக்கு பருவ மழையோடு காற்றழுத்த தாழ்வு மண்டலம், மிதிலி புயல் உள்ளிட்டவைகளால் தமிழகத்தை கனமழை வெளுத்து வாங்கிய நிலையில் தற்பொழுது குமரியின் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவாகி உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழகம் முழுவதும் விடாது மழை பெய்து வருகிறது. இந்த மாத இறுதிக்குள் மீண்டும் ஒரு புயல் உருவாகும் என்று வானிலை வல்லுனர்கள் தெரிவித்து வரும் நிலையில் தற்பொழுது உருவாகி உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சென்னை, விழுப்புரம், கடலூர், நாகை, மயிலாடுதுறை, நெல்லை, தூத்துக்குடி, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய கனமழை அடுத்த மூன்று மணி நேரத்தில் பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.

கனமழை எதிரொலியால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களின் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.