தமிழகத்தில் இன்று கனமழை பொய்யும் 12 மாவட்டங்கள் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் ஆகியவை ஆகும்.
மேலும் நாளை அதாவது 8-ம் தேதி 13 மாவட்டங்களில் கனமழை பொய்யும் அந்த மாவட்டங்கள் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகியவை ஆகும்.
இதனைடுத்து நாளை மறுநாள் அதாவது 9-ம் தேதி கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை 6 மாவட்டத்தில் கனமழைக்கு அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் நவம்பர் 10ம் தேதி கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய 6 மாவட்டங்களில் அதிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
தென்மேற்கு வங்ககடலிலும் மன்னார் வளைகுடாவிலும் மேல் ஒரு வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்ச்சி நிலவுகிறது. இதனால் சென்னை மற்றும் அதனை சுற்றயுள்ள பகுதிகளில் அடுத்த 48 மணி நேரம் நல்ல கனமழைக்கு அதிக வாய்ப்பு உள்ளது. கடலோர பகுதிகளில் தற்போது மற்றும் அடுத்த 2 நாட்கள் மணிக்கு 55km வேகத்தில் காற்றின் அளவு இருப்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.