Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை? சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு!

#image_title

அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை? சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு!

கடந்த டிசம்பர் மாதம் வங்க கடல் தென்கிழக்கு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புயலாக வலுப்பெற்றது. இந்த புயலிற்கு மாண்டஸ் என பெயர் வைக்கப்பட்டது. அந்தப் புயலின் காரணமாக தமிழகம்,புதுச்சேரி காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் கனத்த மழை பெய்து வந்தது. அதனால் தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டனர்.

மேலும் ஒரு சில பகுதிகள் பலத்த சேதம் அடைந்தது. சேதம் அடைந்த பகுதிகளுக்கு நிவாரண நிதி வழங்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால் தற்போது வரை அது குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. மேலும் கடந்த ஜனவரி மாதத்தில் தான் மழையின் தாக்கம் சற்று குறை தொடங்கியது.

ஆனால் பிப்ரவரி மாதத்தின் இறுதியில் இருந்து வானிலை மாற்றம் காரணமாக ஆங்காங்கே மழை பெய்து வருகின்றது. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில் கிழக்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக இன்று முதல் ஆறாம் தேதி வரை தென் தமிழக மாவட்டங்களில் ஒரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் தென் தமிழக மாவட்டங்கள் டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை வரை பெய்ய வாய்ப்புள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் தெளிவாக காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 செல்சியஸாக இருக்கக்கூடும் என கூறப்படுகிறது.

Exit mobile version