தமிழ்நாட்டில் இன்று 15 மாவட்டங்களுக்கு கனமழை அறிவிப்பு.

0
97
Heavy rain forecast for 15 districts in Tamil Nadu today.

சென்னை: தமிழ்நாட்டில் மதியம் ஒரு மணி வரை 15 மாவட்டங்களுக்கு கனமழை அறிவிப்பு. தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் கடலோரம் மற்றும் அதன் அருகில் இருக்கும் மாவட்டங்களுக்கு கனமழை பெய்து வருகிறது. மேலும் தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவிய தாழ்வு மண்டலம் சென்னை தெற்கு தென்கிழக்கு திசையில் சுமார் 480 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து தென்கிழக்கு திசையில் 430 கிலோமீட்டர் தொலைவிலும், நாகப்பட்டினத்தில் இருந்து தென்கிழக்கு திசையில் 310 கிலோமீட்டர் தொலைவிலும், இலங்கையின் திரிகோணமலையிலிருந்து கிழக்கு வடகிழக்கு திசையில் 100 கிலோமீட்டர் தொலைவிலும், மையம் கொண்டுள்ளது.

மேலும் இந்த காற்றழுத்து தாழ்வு மண்டலம் புயலாக வலு பெறாது என தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்து தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாட்டில் மற்றும் புதுவையில் அனேக இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காற்றழுத்து தாழ்வு மண்டலம்  நகரும் வேகம் குறைந்ததால் நேற்று மழையின் அளவு வெகுவாக குறைந்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நேற்று இரவு கனமழை கொட்டிதீர்த்தது.

இந்த நிலையில் இன்று 15 மாவட்டங்களுக்கு கனமழைத்து வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை  ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவாரூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கன மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டது. மேலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று மதியம் ஒரு மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கி  வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.